சன் சைன் எஸ்டேட் உரிமையாளர் விவாகரின் உருவ பொம்மையை "கழுவுற்றுதல்'

ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு தபால். 

தமிழக முதல்வர் முகவரியின் கீழ் பணிந்து சமர்ப்பிக்கும் மனு.

1.        திரு.மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

திண்டுக்கல் .

.     2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,

 கண்காணிப்பாளர் அலுவலகம் 

திண்டுக்கல் மாவட்டம்.

விடுநர் :

ஹாஜி.S.முஹம்மது,9345562420

S/O. சேக் முஹம்மது 

பங்களாபட்டி ரோடு 

வடகரை. பெரியகுளம்.

தேனி மாவட்டம். 

பெறுநர் :

1.        மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,

 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

திண்டுக்கல் .

2.         மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,

 கண்காணிப்பாளர் அலுவலகம் 

திண்டுக்கல் மாவட்டம்.

ஐயா 

 பொருள்:   

2015 ஆம் வருடம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமம் ச.என். 330/12,330,11,331/1 ல் 4 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை,  சன் சைன் எஸ்டேட் உரிமையாளர்கள் விவாகர் / கற்பகம் தம்பதியருக்கு, பரிவர்த்தனை அடிப்படையில் கிரையம் பதிந்து கொடுத்து -  தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமம் குரு கார்டன் லே அவுடில் இரண்டு  வீட்டை  கிரையம் பதிந்து  வாங்கியதில் -  மேற்படி வீடுகளை ,  எனக்கு கிரயம் பதிந்து கொடுத்த அதே விவாகர், திருச்சியை சேர்ந்த விமல் ஜான் , ரமேஷ் ஆகிய இரண்டு நபர்கள் பெயரில் தனது சொந்தச் செலவில்  இதே வீடுகளை  கிரயம் பதிந்து -  அதே நாளில், மதுரை அலகாபாத் வங்கி கிளையில் ரூ. 32 லட்சம் அடமான கடண் வாங்கியிருந்ததை  மறைத்து ஏமாற்றிய வழக்கில் - கடந்த ஐந்து ஆண்டு காலமாக,  காவல்துறை -  வருவாய்த்துறை -  பதிவுத்துறை போன்ற அரசு நிறுவனங்களில் போராடி தீர்வு கிடைக்காத விரக்தியிள்  "சன் சைன் எஸ்டேட் உரிமையாளர் விவாகரின் உருவ பொம்மை, 05/ 04/ 2025 தேதி காலை 11 மணிக்கு பூம்பாறை கிராமம் ச.என். 331/1C எமது தோட்டத்தில்  நடக்கப் போகும்  கழுவேற்றுதல் நிகழ்வுக்கான அனுமதி மற்றும்  பாதுகாப்பு".  வேண்டிய  மனு. 

 

பார்வை:

1.  30/8/ 2019.ம் தேதி தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு குறைதீர் முகாமில் சமர்ப்பித்த அசல் மனு .

2.  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தபால் ந.க.என். G4/CMSGRS/03/38621/ 2019.  நாள்:18/10/2019. 

3.  தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக ந. க. என்: 9014/2022/C2.நாள்:25/03/2022.

4. தமிழக முதல்வரின் முகவரியின் கீழ் நான் அனுப்பிய மனு. நாள் 3/12/2022.

5. தமிழக முதல்வரின் முகவரியின் கீழ்  கொடைக்கானல் காவல் ஆய்வாளருக்கு நான் அனுப்பிய மனு எண் : TN/HOME EXC/THN/1/CC/21JAN23/ 4915101. நாள் 23/1/2023.

6. கொடைக்கானல் சார் பதிவாளர் அவர்களுக்கு நான் அனுப்பிய மனு நாள் 23/1/23.

7. கொடைக்கானல் வட்டாட்சியர் பூம்பாறை கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பிய தபால் ஓ.மு. எண் : 0383/2023..நாள்:23/02/2023.

8. 7/10/2024. தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில்  கொடுத்த கடைசி மனு.

 

 

 

74 வயது மூத்த குடியான நாள் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.என்னைப் போன்ற ஒரு மூத்த குடிமகன் மற்றவர்களின் தீய செயள்களால்  வஞ்சிக்கப்பட்டு, கஷ்ட நஷ்டத்தை அடையும் பொழுது, நிவாரணம் அல்லது நீதி கேட்டு முதல் கட்டமாக அரசு அதிகாரிகளையே அணுக வேண்டியது உலக நியதி. 

 

கடந்த ஐந்து ஆண்டு காலமாக எனது பிரச்சினைகளுக்கு  தீர்வு காண நூற்றுக்கும் மேற்பட்ட மணுக்களை  தபால் மூலமாகவும் நேரிலும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை அணுகியதில் முடிவு "மன உளைச்சலும் விரக்தியும்" தான். 

"பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட்டால்,  நீதித்துறையை அனுக வேண்டிய நிர்பந்தம், அதிக செலவு ,தாமதம் முதலியன தேவையில்லை. விரும்பத்தக்கதும் இல்லை."

The pressure of the judicial process,  expensive and dilatory,  is neither necessary nor desirable if responsible bodies are  responsive to duties.Quoted  by justice Elope Dharmarao and K.K.Sasidharan J - Writ Law Reporter march 2011.

மேலேகண்ட வார்த்தைகள் நான் கூறியது அல்ல,  மாறாக மாண்புமிகு நீதிபதிகள் எல்போ தர்மரா மற்றும் K.K சசிதரன் கூறியது.

இரண்டாம் கட்டமாக நான் நீதிமன்றத்தை  மட்டுமே அணுக முடியும். ஆனால் எனது வயது முதிர்வு  காரணமாக நீதிமன்றத்தின் மூலம் விரைவான நீதியோ, நிவாரணமோ கிடைக்காது என்பது எனதுஆழமான நம்பிக்கை. 

மூன்றாம் கட்டம் -  மக்கள் நீதி மன்றம் :

ஒரு திருடனுக்கு அல்லது விபச்சாரிக்கு தண்டனை அளிக்க வேண்டுமானால் அரசு தான் அளிக்க முடியும். எனது எதிர் தரப்பினரை தண்டிப்பது எனது நோக்கம் அல்ல. மாறாக நான் தேடுவது எனது பிரச்சனைகளுகான தீர்வு. .நீதியல்ல.

 

நீதியைத் தேடி நீதியும் கிடைக்காமல் அமைதியை தொலைத்தவன் என்ற அடிப்படையில் பொதுவெளியில்  அநீதியை பிரகடனப்படுத்தி,

ஏதோ ஒரு வகையில் விவாகரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து "கிடைத்த மட்டும் லாபம்என்ற அடிப்படையில்,  சட்டப்படி செல்லுபடியாக ஆவணங்களை உற்பத்தி பண்ணி எனது நிலத்தை அபகரிக்க முயலும்  22 நபர்களுக்கு எச்சரிக்கை செய்வது மட்டுமே 

 இந்த கழு வேற்றும் நிகழ்வு.

 

யார் இந்த விவாகர்/ கற்பகம் தம்பதியர் ?

~ எங்கு பிறந்தார்கள்? எங்கு படித்தனர் ? எப்போது திருமணம் செய்து கொண்டனர்? இது போன்ற விவரம் யாருக்கும் தெரியாது.

 

2013, 2014 மற்றும் 2015 ல், சன் சைன் எஸ்டேட்  என்ற  போர்வையில்,

தேனி,மதுரை மற்றும்  கொடைக்கானலில்,  ஒரு நிலத்தை தேர்வு செய்து நிலத்தின் உரிமையாளரிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஒரு லே - அவுட்  போட்டு, திருச்சி (OFT ) அரசு சார்ந்த ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த 40  தொழிலாளர்களின் சம்பள பட்டியலை கமிஷன் அடிப்படையில்  வாங்கி,  அதை இரு மடங்காக  திருத்தி, இன்னும் பல போலியான ஆவணங்களை உற்பத்தி செய்து,  தமது சொந்த செலவில் தொழிளர்கள் பெயரில் மனையை பதிவு செய்து, அதே நாளில், வங்கிக்கு அடமானம் பதிந்து கொடுத்து ரூ .15 கோடிக்கும் மேல் தொழிலாளர்கள் பெயரில் கடன் பெற்று, வீடுகள் கட்டி, மேற்கண்ட  சங்கதிகளை மறைத்து அதே வீடுகளை வேறு நபர்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட " ஒரு சிறிய கும்பலைநடைமுறையில் இருக்கும் நீதி அமைப்பின் கீழ்  தண்டிக்க முடியாத ஒரு விரக்தியிள் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சிலர் தீவிர யோசனைக்குப் பின், பொதுவெளியில்  அநீதியை பிரகடனப்படுத்தி, அதிகாரிகளின் கவனத்தை  கவரும் முயற்சியே இந்த கழு வேற்றும் நிகழ்வு.

 

எனவே, சன் சைன் எஸ்டேட் உரிமையாளர் விவாகரின் உருவ பொம்மை கழுவுற்றுதல் நிகழ்வுக்கான அனுமதியும்,  உரிய முறையில் பாதுகாக்கும் தருமாறு தாழ்மையுடன் பிரார்த்திக்கிறேன்.

 

தங்கள் பணி உள்ள

 

ஹாஜி.S.  முஹம்மத்

 தேதி:27/02/25.

 

Comments