Posts

Showing posts with the label E Book. Periyakulam Chapiter

அத்தியாயம் 3: பெரியகுளம் – வாழ்வியலைக் கற்றுக்கொடுத்த ஊர்.

அத்தியாயம் 3: பெரியகுளம் – வாழ்வியலைக் கற்றுக்கொடுத்த ஊர். தேதி: 08/01/2026 பகுதி 1: அபிவிருத்தி (Development) – கடந்த காலக் கண்ணாடி 2004 மே மாதம் தொடங்கி, 21 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இவை வெறும் ஆண்டுகள் அல்ல, எனது சிந்தனைச் சிதறல்கள். அடுத்தது காட்டும் கண்ணாடியைப் போல என் கடந்த காலத்தை நானே திரும்பிப் பார்க்கும் ஒரு சுயசரிதை முயற்சி இது. எனது மாமனார் காசீம் ராவுத்தர் திருமணமான புதிதில் எனக்கு ஒரு 'ஃபார்முலா' கற்றுக் கொடுத்தார்: "ஒருவன் தன் மனைவி மக்களிடம் நேர்மையாக வாழ்ந்தால் மட்டுமே, அவன் நண்பனுக்கும் நேர்மையாக இருக்க முடியும். குடும்பத்திற்கு நேர்மையில்லாதவன் நண்பனுக்கு நேர்மையாக இருப்பது சாத்தியமில்லை." இந்த அளவுகோலை வைத்து என்னைப் பார்க்கிறேன். என் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளிடம் நான் 100% நேர்மையாகவே வாழ்ந்துள்ளேன். ஆனால், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் என் மீது அவர்களுக்குச் சில விமர்சனங்கள் உண்டு. "ஒரு கார் கூட வாங்காமல் வாழ்ந்துவிட்டீர்களே" என்ற இளைய மகளின் சலிப்பு, "பி.ஆர்க் அட்மிஷனுக்கு நீங்கள் முயற்சி எடுக்கவில்லை" என்ற...