அத்தியாயம் - 1: மீட்டெடுத்தல் (Recovery)
அ த்தியாயம் - 1: மீட்டெடுத்தல் (Recovery) அத்தாவின் அறிவுரையும் , ஒரு கரடி கதையும் என் அத்தா எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம் இது : " பணத்திற்காகவோ , சொத்திற்காகவோ சண்டையிடாதே . உலகம் பரந்து விரிந்திருக்கிறது . மற்றவர்களுடன் போரிடும் நேரத்தை உழைப்பில் செலுத்தி , இழந்ததை விட அதிகமாகச் சம்பாதித்து வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்து . அல்லாஹ் உதவி செய்வான் ." ஆனால் என் நிலைமை இன்று அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நண்பனைப் போல இருக்கிறது . வெள்ளத்தில் ஏதோ ஒரு பொக்கிஷம் அடித்து வருகிறது என்று குதித்தவனை ஒரு கரடி பிடித்துக்கொண்டது . கரடியிடமிருந்து தப்பிக்க அவன் நினைத்தாலும் , கரடி அவனை விடவில்லை . அதுபோலவே , ரியல் எஸ்டேட் தொழிலில் நான் செய்த அறியாமையாலும் , சில தவறான முடிவுகளாலும் எட்டு வழக்குகள் இன்று கரடியாக என்னை இறுக்கிக் கொண்டுள்ளன . தாங்கள் என்னைச் சேர்த்துவிட்ட கல்வி நிறுவனங்கள் "Fittest will survive" ( தகுதியுள்ளவை பிழைக்கும் ) என்ற டார்வின் தத்துவத்தைத்தான் எனக்குக் ...