கருவேற்றல்" நிகழ்விற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரியதின் மீதான நினைவூட்டல் மனு
"கருவேற்றல்" நிகழ்விற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரியதின் மீதான நினைவூட்டல் மனு
நினைவூட்டாளர்
ஹாஜி.S.முஹம்மது,
S/O. சேக் முஹம்மது
பங்களாபட்டி ரோடு
வடகரை. பெரியகுளம்.
தேனி மாவட்டம்.
9345562420
பெறுநர் :
1 உயர்திரு. மதுமதி அவர்கள்,
கொடைக்கானல் சரக
காவல் துணை கண்காணிப்பாளர்,
கொடைக்கானல்.
2. உயர்திரு காவல் ஆய்வளர் அவர்கள்,
கொடைக்கானல் காவல் நிலையம்
கொடைக்கானல்.
3.உயர்திரு. கோ ட்டாசியர் அவர்கள்,
கோட்டாசியர் அலுவலம்
கொடைக்கானல்
4.உயர்திரு. வட்டாசியர் அவர்கள்,
வட்டாசியர் அலுவலம்
கொடைக்கானல்.
5. கிராம நிர்வாக அலுவலர் அவர்கள்
பூம்பாரை கிராமம்
கொடைக்கானல்.
ஐயா,
பார்வை: TN/HOMEEXC/DGL/P/PORTAL 28 FEB25.11131893. ( மனுவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது)
பார்வையில் கண்ட மனு நமது தமிழக முதல்வர் முகவரி துறையின் இணைய ( Zoho Portal ) வழியாக சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் பதிவு தபால் மூலமாக அனுப்பி மூன்று வாரங்கள் ஆகியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 40க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கழுவேற்று தல் நிகழ்விற்கு அழைப்புகள் அனுப்பிய நிலையில்,
"ஐந்து நபர்களுக்கு மேல் ஒன்று கூடி இது போன்ற ஒரு நிகழ்வை நடத்தும் பொழுது காவல்துறையின் அனுமதி கட்டாயம். நமது காவல்துறையின் அனுமதி இல்லாமல் நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்" என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே எனது கோரிக்கையை நன்கு பரிசீலனை செய்து, மேற்படி கழுவு ஏற்றுதல் நிகழ்விற்கு தக்க அனுமதி அளித்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு பாதுகாப்பு தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் பணிவுள்ள
ஹாஜி. எஸ் .முஹம்மது
பின்குறிப்பு:
நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேலே கண்ட வழக்கு சம்பந்தமான அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
Comments
Post a Comment