Posts

Showing posts from 2024

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது?

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது? "சட்டத்தின் பிடியில் என்னை சிக்க வைத்து  எனது செயல்பாடுகளை முடக்குவது" என்று எதிர்த்தரப்பினர் விரித்து வைத்திருக்கும் சதி வலையிள்  நான் சிக்கி விடக்கூடாது.   தெரிந்தோ தெரியாமலோ சட்டத்திற்கு எதிராக  நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த  காரியத்தையும்  செய்து விடக்கூடாது. இந்திய சட்டத்தை பற்றி குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டம் பற்றி எனக்கு முழுமையாக தெரியாது.    சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்  உள்ள அரசு அதிகாரிகளின் முன் சரணடைந்துள்ளேன். எந்தவிதமான ஒலிவு மறைவும் இல்லாமல் எனது செயல்பாடுகளை சமூக வலைத்தளங்கள் மூலம்  பகிரங்கப்படுத்துவது. அவர்கள் நான் சட்டத்திற்கு புறம்பாக எந்த காரியத்தையும் செய்யாமல் என்னை வழி நடத்துவார்கள் என்று நம்புகிறேன். கொடைக்கானல் வட்டாட்சியர் அவர்கள் என்னுடைய பிரச்சனையை " இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது  எனவே காவல்துறையின் உதவியை  நாடி பரிகாரம் தேடிக் கொள்ளவும்" என தபாலில் கூறியுள்ளார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது? சரி...

நான் எந்தளவிற்க்கு பாதுகாப்பாக இருக்கிறேன்? How Safe I am?

அறம் பாடி அழித்தல் .. "தீமையை"  இன்றைய சிந்தனை தேதி:9/10/ 2024  தலைப்பு : How Safe I am ?.Culturally Socially, Economically? கலாச்சார ரீதியாக சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக நான் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறேன்?  கலாச்சார ரீதியாக யோசித்தாள், இறை வேதமாகிய குர்ஆனும் எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலும் எனக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். ஆனால் நான் பிறந்து வளர்ந்த சூழல்  பொக்கிஷத்தை முழுமையாக கடைப்பிடிக்க முடியாத காரணத்தால்   நான் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக  பாதுகாப்பாக இல்லை.   கீழே கண்ட தபால் இதை தெளிவாகும். மரியாதைக்குரிய பெரியகுளம் மக்கா பள்ளி தலைமை இமாமும் ஜமாத் தலைவருமான ஹஜரத் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)  ஹாஜி. எஸ் முகமம்து ஆகிய நான் தங்கள் மஹல்லாவில் குடியிருந்து கொண்டு தாங்கள் பொறுப்பில் இருக்கும் பள்ளிவாசலுக்கு தலைக்கட்டு  வரி செலுத்தும் ஒரு குடும்பஸ்தனாவேன் . எனவே  எனக்கு சிலரால்  அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது, தங்களுடைய மேலான  கவனத்திற்கு கொண்ட...

அறம் பாடி அழித்தல் .. "தீமையை" (Content)

அறம் பாடி அழித்தல் .. "தீமையை" (Content)  முதல் கட்டம்  - அரசு அதிகாரிகள் : என்னைப் போன்ற ஒரு மூத்த குடிமகன் மற்றவர்களின் தீய செயள்களால்  வஞ்சிக்கப்பட்டு, கஷ்ட நஷ்டத்தை அடையும் பொழுது, நிவாரணம் அல்லது நீதி கேட்டு முதல் கட்டமாக அரசு அதிகாரிகளையே அணுக வேண்டியது உலக நியதி. இதை யாரும் மறுக்க முடியாது . கடந்த ஐந்து ஆண்டு காலமாக எனது பிரச்சினைகளுக்கு  தீர்வு காண நூற்றுக்கும் மேற்பட்ட மணுக்கள் மூலமாகவும் நேரிலும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை அணுகியதில் முடிவு "மன உளைச்சலும் விரக்தியும்" தான் மிச்சம். இரண்டாம் கட்டம்  - நீதிமன்றம் : "பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட்டால்,  நீதித்துறையை அனுக வேண்டிய நிர்பந்தம், அதிக செலவு ,தாமதம் முதலியன தேவையில்லை விரும்பத்தக்கதும் இல்லை." The pressure of the judicial process,  expensive and dilatory,  is neither necessary nor desirable if responsible bodies are  responsive to duties.Quoted  by justice Elope Dharmarao and K.K.Sasidharan J - 2011; inparagragraph 22 of order of W. A.No.1353 of 2...

நட்பு என்பது இனிமையான சுமை,

1. நட்பு என்பது  இனிமையான சுமை,  அருமையான வாய்ப்பு அல்ல. என்னுடைய எஞ்சிய வாழ்க்கை மற்றவர்களின் பிரச்சனைக்கான தீர்வை காண்பது. 2. Self Help through mutual Help. மற்றவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதன் மூலம் என்னுடைய வாழ்வை வளமாக்குவது.  மற்றவர்களின் பிரச்சனை இருக்கட்டும் உங்கள் பிரச்சனை என்ன ?   என்பது  சிலரின் கேள்வி. என்னுடைய பிரச்சனைகள் மட்டுமல்ல  நமது எல்லோருடை பிரச்சினைகளுக்கான  சுமூக தீர்வுக்காக என்னை படைத்த இறைவனிடம் ஒவ்வொரு நாளும் காலையில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் மன்றாடுகிறேன். ஏக இறைவனின் ஒரே நிபந்தனை: இறை வேதமாகிய குர்ஆன், அதன்படி வாழ்ந்து காட்டிய எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்வியல் சட்ட திட்டங்களை அணு அளவும் பிசங்காமல் வாழ்ந்தால்,  நமது அனைத்து பிரச்சனைகளும் நொடியில் தீரும். 

என்னுடைய எதிரி யார்? Episode - 1.

என்னுடைய எதிரி யார்?  Episode - 1. என்னுடைய சிந்தனையும் செயலும் எப்படி எதை நோக்கி பயணிக்கிறது என்பதை எனக்கு படம் பிடித்து காட்டும் நண்பன்.  என்னுடைய சிந்தனையும் செயலும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் 1ஆம் தேதிக்கு முன்னால் எப்படி இருந்தது ஆகஸ்ட் 1  க்கு பின்னால் எப்படி இருக்கிறது? " Rewind " எனது கடந்த கால வாழ்க்கையை ஒரு குறும்படம் போல் திரும்ப போட்டு  பார்க்கிறேன். ஒரு சில மனிதர்களுடைய முகத்தை திருப்பிப் பார்க்கும் பொழுது எனது ரத்தம் எல்லாம் சூடு ஏறுகிறது ..எந்த அளவுக்கு என்றால் எனக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால்.. நான் ஒரு அரசனாக இருந்திருந்தால் அவர்களுடைய தலையை வெட்டி சிறைசேதம் பண்ண உத்தரவிட்டு இருப்பேன். இதுவே என்னுடைய கோபத்தின் அளவுகோல். இந்த மனநிலையின் பின் விளைவு என்ன தெரியுமா?   எனது உடலும் உள்ளமும் சமநிலையை இழந்ததுதான் மிச்சம் .இதுவே 2024 ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னால் இருந்த மனநிலை. இன்று ஆகஸ்ட் மாதம்  2 ஆம் தேதி, அதே கேள்வி,  என்னுடைய எதிரி யார்? என்னுடைய உண்மையான எதிரி சைத்தான்  சைத்தான் என்பவன் யார்? கெட்ட உண்மைக்கு புறம்பான  ஒர...