காவல் நிலைய விசாரணை முடிவும்... புதிய வியூகமும்!
காவல் நிலைய விசாரணை முடிவும்... புதிய வியூகமும்! தேதி: 25/01/2026 பகுதி 1: இ-புத்தகம் (E-Book Content) திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றைய விசாரணையின் முடிவு எனக்குஒரு வகையில் சாதகமே. "நில அபகரிப்பு" (Land Grabbing) என்ற கிரிமினல் பிரிவின் கீழ் இது வராது. RM. ராஜேந்திரன் என் மீது கொடுத்த புகாரில் எவ்வித குற்றவியல் முகாந்திரமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.ராஜேந்திரன் கொடுத்த புகாரும், நான் கொடுத்த புகாரும் "சிவில்" (Civil) தன்மையுடையவை எனக்கருதி முடிக்கப்பட்டன. இது எனக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதிகார வர்க்கம் இதுபோன்ற சிக்கல்களை 'கோப்புகளை முடிப்பதில்தான்' ஆர்வம் காட்டும். ஆனால் எனது நோக்கம் கோப்புகளை முடிப்பதல்ல, உரிமைகளை மீட்டெடுப்பது. நீதிமன்றம் செல்லாமல், சமூக வலைத்தளங்கள் வாயிலாக 'அறம் பாடி' எதிராளியின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் எனது 'PAR' ஆராய்ச்சிக்கு, இனி ஒரு புதிய வடிவம் தேவைப்படுகிறது. எனது பொருளாதாரத்தைச் சுரண்டாத, அதே சமயம் எனது கொள்கையைப் புரிந்து பயணிக்கும் ஒரு சட்டத் துணைவன...