கருவேற்றல்" நிகழ்விற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரியதின் மீதான நினைவூட்டல் மனு
"கருவேற்றல்" நிகழ்விற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரியதின் மீதான நினைவூட்டல் மனு நினைவூட்டாளர் ஹாஜி.S.முஹம்மது, S/O. சேக் முஹம்மது பங்களாபட்டி ரோடு வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம். 9345562420 பெறுநர் : 1 உயர்திரு. மதுமதி அவர்கள், கொடைக்கானல் சரக காவல் துணை கண்காணிப்பாளர், கொடைக்கானல். 2. உயர்திரு காவல் ஆய்வளர் அவர்கள், கொடைக்கானல் காவல் நிலையம் கொடைக்கானல். 3.உயர்திரு. கோ ட்டாசியர் அவர்கள், கோட்டாசியர் அலுவலம் கொடைக்கானல் 4.உயர்திரு. வட்டாசியர் அவர்கள், வட்டாசியர் அலுவலம் கொடைக்கானல். 5. கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் பூம்பாரை கிராமம் கொடைக்கானல். ஐயா, பார்வை: TN/HOMEEXC/DGL/P/PORTAL 28 FEB25.11131893. ( மனுவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது) பார்வையில் கண்ட மனு நமது தமிழக முதல்வர் முகவரி துறையின் இணைய ( Zoho Portal ) வழியாக சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் பதிவு தபால் மூலமாக அனுப்பி மூன்று வாரங்கள் ஆகியும் எந்த வித நடவட...