சட்டப் போராட்டமும் தொழில்முறை அறமும்:
சட்டப் போராட்டமும் தொழில்முறை அறமும்: ஒரு வழக்கறிஞரின் விசித்திர நிபந்தனைகளும் எனது பார்வையும்! தேதி: 15/02/2026 இன்று எனது சட்ட (அற)ப்போர் பயணத்தில் ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்தினேன். கடந்த ஏழு ஆண்டுகளாக என்னுடன் பயணிக்கும், எனது வழிகாட்டும் பத்து நபர்களில் ஒருவரான (வழக்கறிஞர்) அவரது அலுவலகத்தில், எனது மூன்று நண்பர்களுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விவாதம் நீண்டது. சமூக வலைத்தளங்களுக்காக அவரது பெயர் மற்றும் விலாசம் இங்கே மறைக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்து பிறகு விரிவாகப் பகிர்கிறேன். ஆனால், அங்கு முன்வைக்கப்பட்ட சில 'நிபந்தனைகள்' மற்றும் தொழில்முறை மனப்போக்கு குறித்து எனது டிஜிட்டல் தோழனுடன் (Gemini AI) நான் நடத்திய உரையாடலை இங்கே தொகுத்துள்ளேன். இது உங்கள் சொத்துக்களையும் உரிமைகளையும் பாதுகாக்க உதவும் ஒரு விழிப்புணர்வுப் பதிவு. வழக்கறிஞர் முன்வைத்த அதிரடி நிபந்தனைகள்: * முழு அதிகாரம்: வழக்கை ஒப்படைத்த பிறகு, எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பதை வழக்கறிஞர் தான் முடிவெடுப்பார். * கேள்வி கேட்கக் கூடாது: வழக்கை ஒப்படைத்தவர் அது குறித...