Posts

Showing posts from September, 2024

நட்பு என்பது இனிமையான சுமை,

1. நட்பு என்பது  இனிமையான சுமை,  அருமையான வாய்ப்பு அல்ல. என்னுடைய எஞ்சிய வாழ்க்கை மற்றவர்களின் பிரச்சனைக்கான தீர்வை காண்பது. 2. Self Help through mutual Help. மற்றவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதன் மூலம் என்னுடைய வாழ்வை வளமாக்குவது.  மற்றவர்களின் பிரச்சனை இருக்கட்டும் உங்கள் பிரச்சனை என்ன ?   என்பது  சிலரின் கேள்வி. என்னுடைய பிரச்சனைகள் மட்டுமல்ல  நமது எல்லோருடை பிரச்சினைகளுக்கான  சுமூக தீர்வுக்காக என்னை படைத்த இறைவனிடம் ஒவ்வொரு நாளும் காலையில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் மன்றாடுகிறேன். ஏக இறைவனின் ஒரே நிபந்தனை: இறை வேதமாகிய குர்ஆன், அதன்படி வாழ்ந்து காட்டிய எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்வியல் சட்ட திட்டங்களை அணு அளவும் பிசங்காமல் வாழ்ந்தால்,  நமது அனைத்து பிரச்சனைகளும் நொடியில் தீரும்.