74 வயதில் அமைதியைத் தேடி ஒரு சட்டப் போர்
74வயதில் அமைதியைத் தேடி ஒரு சட்டப் போர் (புத்தகத்தின் தலைப்பு:) ( நீதிமன்றங்களுக்கு வெளியே சட்டச் சிக்கல்களை களைந்து நிம்மதியைத் தேடும் ஒரு முதியவரின் அனுபவப் பகிர்வு ) முன்னுரை ஏக இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன் . (31/12/2025) யார் அந்த ' நான் '? " முஹம்மது " என்ற உடலில் சிறைபட்டு , அதிலிருந்து வெடித்து வெளியேறத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு ' ரூஹ் ' ( ஆன்மா ) தான் நான் . இன்னும் 60 நாட்களில் நான் 75 வயதைத் தொடப் போகிறேன் . இந்தப் பயணத்தைத் தொடங்கும் முன் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர விரும்புகிறேன் . இறைவன் எனக்கு வழங்கிய மிகப்பெரிய அருட்கொடை எனது குடும்பம் . எனது மூத்த மகள் ( டிசம்பர் 4) மற்றும் மூத்த பேரன் ( டிசம்பர் 1) ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு , தேனி அனிபா உணவகத்தில் மதிய உணவும் , அதைத் தொடர்ந்து பண்பார்க் விளையாட்டுகளுமாக அன்றைய பொழுது இனிமையாகக் கழிந்தது . ஒரு தற்செயலான ஒற்றுமை என்னவென்றால் , 2008 டிசம்பர் 1- ம் தேதி நான் ஹஜ் ...