கொடைக்கானல் மாநகர மக்கள் மன்றத்திற்கு ஒரு மூத்த குடியின் திறந்த மடல்!**
** பொதுவெளியில் விவாதம்** **வலைப்பதிவு ( Blog):** https://activismforfastjustice.blogspot.com/?m=1 *கொடைக்கானல் மாநகர மக்கள் மன்றத்திற்கு ஒரு மூத்த குடியின் திறந்த மடல்!** பூம்பாறை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது பெரியகுளம் மாநகரில் எனது குடும்பத்துடன் வசித்து வரும் 75 வயது மூத்த குடிமகன் நான். என்னைப் போன்ற ஒரு சாமானியன், அளப்பரிய பண பலம், ஆட்பலம் மற்றும் அரசியல் பின்னணியுடன் 300 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருக்கும் ஒருவருடன் தனது வாழ்நாள் நில உரிமைக்காகச் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். அரசாங்க அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக உரிய நீதி கிடைக்கத் தாமதமாகும் பொழுது, ஒரு சாமானியன் வேறு வழியின்றி மக்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். அந்த அறச்சீற்றத்தின் வெளிப்பாடுதான் இந்த ** “ பொதுவெளியில் விவாதம் ”**. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெரியகுளம் ஜமாத் கடிதமே, எனக்கும் விஜிபி ( VGP) நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் வழக்கின் சுரு...