Executive Summary Participatry Action Research - PAR
( By Haji.S. Mohamed 9345562420.)
"பங்கேற்பு நடவடிக்கைஆராய்ச்சி" என்பது , என்னுடன் பயணித்த / பயணிக்கும் 100 தனி நபர்க களுக்கும் எனக்கும் மத்தியில் வணிக நோக்கத்தையும் தாண்டி கட்டமைக்க இருக்கும்"
எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத உன்னதமான உறவுவை' “ Self help Through Mutual help” என்ற கோட்பாட்டை மையமாக வைத்து நடந்து கொண்டிருக்கும் "கலந்துரையாடல் ஆராய்ச்சி" அணுகுமுறையாக்கும்.
பெயர் மறைக்கப்பட்டு 1,2,3 என்ற என்களால் அடையாளப்படுத்தப்பட்ட அவருக்கும் எனக்கும் மத்தியில் அரங்கேறும் நிகழ்வுகள், மற்றும் கலந்துரையாடல்கள் வலைத்தளன்களில் பகிர்வதன் மூலம் ஆவணப்படுத்தப்படும். தனிமனித அந்தரங்க ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.
Participatory Action research.
Participant 4
இந்த ஆய்வுக் கட்டுரையின் ஒட்டுமொத்த நோக்கம்.
1. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எனது சொந்த வாழ்க்கையில் குறிப்பாக அசையா சொத்துக்கள் விற்றது அல்லது வாங்கியது போன்ற பரிவர்த்தனையில் எனக்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்களில் இருந்து வெளிவருவதற்கு நான் கையாளும் வழிமுறைக்கும் இவரின் சட்ட ரீதியான போராட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
2. இந்த ஆய்வுக்கு கட்டுரையின் ஒட்டுமொத்த நோக்கம் எனது "பொது வெளியில் விவாதம்" என்ற வழிமுறையா ? அவரது சட்ட போராட்டமா ? எந்த வழிமுறை சிறந்தது?
ஒரு தனி மனிதன் சக மனிதர்களின் வஞ்சக செயல்பாடுகளால் பாதிக்கப்படும் பொழுது, நீதி கேட்டு அல்லது தீர்வுக்காக அரசாங்க அதிகாரிகளை அணுகுவது முதல் கட்டம். அதில் தீர்வு ஏற்படாத பட்சத்தில் நீதிமன்றங்களை அணுக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம்.
அரசாங்க அதிகாரிகளின் மேசையின் முன்பும், நீதிமன்றங்களில் நீதி கேட்பதிலும் இன்றைய நிலை என்ன?
ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான குறைத்தீர் மனுக்கள் தீர்வு காண முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. முடிவே இல்லாத அந்த வரிசையில் நமது குறைதீர் மனுவின் தீர்வை அல்லது நமது பிரச்சனைக்கான தீர்வை எப்படி அடைவது என்பதில் தான் இவருக்கும் எனக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு.
அவரைப் பற்றி சில வரிகள் ( அறிமுகம் ):
1. திரு PAR 4 . தொழில் ரீதியாக அவர் ஒரு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். நான் மனப்பூர்வமாக குருவாக ஏற்றுக் கொண்ட ஒரு சட்ட வழிகாட்டி. எனது ஆசான். ஒரு சட்ட போராளி.
2. அவரது இரண்டு பிரச்சனைகள். தனது ஷேர் சர்டிபிகேட்டை கொடுத்து கடன் வாங்கிய விஷயத்தில் கடனை ஒரு முறை அல்ல இரண்டு முறை திருப்பி கட்டியும் அதை மீட்ட முடியவில்லை.
இரண்டாவது விஷயம் தங்களுடைய உடன் பிறந்த சகோதரன் நீதிக்கு புறம்பாக அபகரித்த தன்னுடைய நிலத்தை மீட்ட முடியாதது.
இவற்றை மீட்டெடுக்கும் சட்ட போராட்ட த்தில் அவர் அனுபவித்த துன்பங்கள், இழந்த நேரம் மற்றும் பணம், குறிப்பாக அவருடைய சுய கௌரவத்தை பாதிக்கும் வகையில் அவர் அனுபவித்த சிறை தண்டனை மற்றும் பிணையில் வெளிவரும் முயற்சியில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் அவர்களுக்கு கிடைத்த பட்டறிவு,
இன்று ஒவ்வொரு நாளும் என்னைப் போன்ற சட்டத்தால் பாதிக்கப்பட்ட பல நபர்களுக்கு எந்த விதமான பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் நேரடியாக அரசு அதிகாரிகளிடம் குறிப்பாக காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பாக ஏன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் கூட டேபிளை தட்டி இதுதான் சட்டம் சொல்லுகிறது சட்டத்திற்கு புறம்பாக நீங்கள் நடக்கிறீர்கள் என போராடும் தைரியத்தை கொடுத்துள்ளது.
1. இவரின் கோரிக்கை மனுவின்( வழக்கின் ) சாரம் என்ன ?
2. அரசாங்கம் இவர் மேல் எத்தனை வழக்குகள் ( எஃப் ஐ ஆர் ) பதிவு செய்துள்ளது. எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது?
3 இவர் எந்தேந்த அரசாங்க அதிகாரிகள் மீது என்ன காரணம் சொல்லி குற்றம் சாட்டுகிறார்?
4. எந்தெந்த சட்டப் பிரிவுகளை எந்தெந்த இடத்தில் இவர் தனது வழக்கில் உபயோகப்படுத்தி இருக்கிறார்?
5. இவரின் சட்டப் போராட்டமும் பற்றி மக்கள் கண்ணோட்டம். என்ன?
மேலே கண்ட ஐந்து கேள்விகளை அடிப்படையாக வைத்து இவரைப் பற்றி தனி ஒரு கட்டுரை எழுதும் முயற்சி தொடர்கிறது.
இவரின் கடந்த கால கசப்பான அனுபவங்களை தூரமாக இருந்து கண்காணித்ததில் என்னுள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டு அது இப்போது ஒரு மாபெரும் விருட்சமாக மாறிவிட்டது.
அது என்னவென்றால், 90% மேற்பட்ட அரசு அதிகாரிகள், நீதிக்காக போராட வேண்டிய வழக்கறிஞர்கள், நீதியை நிலை நாட்ட வேண்டிய நீதிபதிகள் போன்றோர் சுயநலவாதிகளாக, இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவர்களை மாற்றுவது அல்லது இவர்களிடம் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் விவாதம் பண்ணி காரியத்தை சாதிக்க முயற்சிப்பது வீண் காலதாமதம் ஆகும். அது இயலாத காரியம், அதே நேரத்தில் நமது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதால், "புதுவெளியில் விவாதம்" என்ற வழி முறையில், தவறுகளை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் எனது எதிர் தரப்பினரின் உண்மையான சுயரூபத்தை சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதன் மூலமாக இழந்தவைகளை மீட்டெடுப்பது என்ற சிந்தனை வலுவாக எனது ஆழ்மனதில் பதிந்து விட்டது. இதை செயல் ரூபத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் இவரைப் போன்ற சட்ட போராளிகளின் ஆதரவை திரட்ட முயற்சிக்கிறேன்.
அவரின் 22 ஆண்டு கால சட்ட போராட்டத்தில் ஒரு சிறிய துளி:
2003 ம் ஆண்டு FIR No. 110/2003 ல் ஆரம்பித்த இவர் சட்ட போராட்டம் இருபத்தி ரெண்டு ஆண்டுகள் தொடர் கதையாகி, 2024 ஆண்டு மேற்கண்ட எஃப் ஐ ஆர் ரின் இறுதி விசாரணை அறிக்கை
( Crmp No. 4216/24 ) நீதிமன்றத்தில் தாக்கலாகி அதையும் அந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
3/2/24ம் தேதி இவர் மேல் பதிவாகிய மூன்றாவது ( FIR.No. 45/24. )வழக்கு சிந்துபாத் கதையாக தொடர்கிறது.
12/06/ 2025 ம் தேதி ஆண்டிபட்டி JM கோர்ட்டில் இவர் மேல் பொய்யாக புனையப்பட்ட வழக்குகளுக்கு ஒரு எதிரிடை மனு தாக்கல் செய்கிறார்.
ஐந்து பக்கங்கள் உள்ள இந்த ஆவணம் இத்துடன் இணைத்துள்ளேன்.
மேலே கண்ட எதிரிடை மனுவில் எதிர் மனுதாரர்கள் இருவர். முதல் நபர் இவர் உடன் பிறந்த சகோதரர் கோவிந்தராஜ் , இரண்டாவது நபர் கோவிந்தராஜரின் மனைவி குமுதம். மூன்று மற்றும் நான்காவது நபர்கள் பொய் சாட்சி கூறியவர்கள்.
மீதி இருக்கக்கூடிய ஏழு எதிராளிகள் காவல்துறையை சேர்ந்தவர்கள்.ஆண்டிபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளரில் ஆரம்பித்து தமிழக காவல்துறை தலைவர் மற்றும் இயக்குனர் வரை அந்த சமயத்தில் பொறுப்பில் இருந்த ஏழு உயர் காவல்துறை அதிகாரிகளை எதிர்மனிதாரர்களாக சேர்த்து கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
என்னுடைய பார்வை அல்லது கேள்வி என்னவென்றால் மேலே கண்ட காவல்துறை உயிர் அதிகாரிகளை அழைத்து நீதிமன்றம் விசாரிக்குமா? குறைந்தபட்சம் அழைப்பாணையாவது அனுப்புமா ?
முடிவே இல்லாத நீண்ட வரிசையில் இவரது குறைதீர் மனுக்கள் கடலில் கரைத்த பெருங்காயத்தை போல எந்த தீர்வையும் கொடுக்க வில்லை
இது யாரும் மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.
எனது வாதமும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறையும்.
கடந்த ஐந்து ஆண்டு காலமாக எனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நூற்றுக்கும் மேற்பட்ட மணுக்களை தபால் மூலமாகவும் நேரிலும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை அணுகியதில் முடிவு "மன உளைச்சலும் விரக்தியும்" தான்.
"பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட்டால், நீதித்துறையை அனுக வேண்டிய நிர்பந்தம், அதிக செலவு ,தாமதம் முதலியன தேவையில்லை. விரும்பத்தக்கதும் இல்லை."
The pressure of the judicial process, expensive and dilatory, is neither necessary nor desirable if responsible bodies are responsive to duties.Quoted by justice Elope Dharmarao and K.K.Sasidharan J - Writ Law Reporter march 2011.
மேலேகண்ட வார்த்தைகள் நான் கூறியது அல்ல, மாறாக மாண்புமிகு நீதிபதிகள் எல்போ தர்மரா மற்றும் K.K சசிதரன் கூறியது.
இரண்டாம் கட்டமாக நான் நீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும். ஆனால் எனது வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தின் மூலம் விரைவான நீதியோ, நிவாரணமோ கிடைக்காது என்பது எனது ஆழமான நம்பிக்கை.
மூன்றாம் கட்டம் - மக்கள் நீதி மன்றம் :
ஒரு திருடனுக்கு அல்லது விபச்சாரிக்கு தண்டனை அளிக்க வேண்டுமானால் அரசு தான் அளிக்க முடியும். எனது எதிர் தரப்பினரை தண்டிப்பது எனது நோக்கம் அல்ல. மாறாக நான் தேடுவது எனது பிரச்சனைகளுகான தீர்வு. .நீதியல்ல. நீதியைத் தேடி நீதியும் கிடைக்காமல் அமைதியை தொலைத்தவன் என்ற அடிப்படையில் "புதுவெளியில் விவாதம்" என்ற வழி முறையில், தவறுகளை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் எனது எதிர் தரப்பினரின் உண்மையான சுயரூபத்தை சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதன் மூலமாக இழந்தவைகளை மீட்டெடுப்பது என முடிவெடுத்து செயலில் இறங்கி உள்ளேன் .
ஹாஜி.S. முஹம்மத்
தேதி:26/6/25..
Comments
Post a Comment