தமிழ்நாடு லோக் ஆயுக்தா புகார்.

ப்புதல் அட்டையுடன் பதிவு தபால்

 அனுப்புநர்:

ஹாஜி.S.முஹம்மது, 75/26.

த/பெ. சேக் முஹம்மது,

பங்களாபட்டி ரோடு, வடகரை, பெரியகுளம், தேனி மாவட்டம்.

கைபேசி: 9345562420

 பெறுநர்:

 * மாண்புமிகு தலைவர் அவர்கள், தமிழ்நாடு லோக் ஆயுக்தா,

சிட்கோ கட்டிடங்கள், 6 மற்றும் 7ம் தளங்கள், திரு . வி. க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை.600032.  தொலைபேசி: 044 2999 5408.

 

 * மாண்புமிகு வருவாய் நிர்வாக ஆணையர் (CRA) அவர்கள், எழிலகம், சேப்பாக்கம், சென்னை.600005.  * தொலைபேசி: 044 2852 3299.

 

* மாண்புமிகு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்கள், 

No 1, DR. ராதா கிருஷ்ணன் சாலை மயிலாப்பூர் ,சென்னை 600004.

தொலைபேசி: 044 2844 7701.

 

நகல் (தகவலுக்காக மற்றும் நடவடிக்கைக்காக):

 * வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், கொடைக்கானல்.

 * காவல் ஆய்வாளர் அவர்கள், கொடைக்கானல் காவல் நிலையம், கொடைக்கானல்.

 பொருள்: வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கடமை தவறிய செயலால் (Dereliction of Duty) ஏற்பட்ட மன உளைச்சலுக்குத் தீர்வு காணவும், வட்டாட்சியர் முன்னிலையில் எதிர் தரப்பினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை (Peace Committee Meeting) நடத்தி  சமாதான தீர்வு காண அனுமதி மற்றும் பாதுகாப்பு கோருதல் - சம்பந்தமாக.

 ஐயா/அம்மா,

75 வயதான நான், கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன். மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட நான், எனது நிலம் சார்ந்த விவகாரங்களில் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், எதிர் தரப்பினரின் அச்சுறுத்தலாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இது குறித்து நான் சமர்ப்பிக்கும் முறையீடு பின்வருமாறு:

 1. பின்னணி மற்றும் சட்டப் போராட்டங்கள்:

 * வழக்கு 1 (பாதை விவகாரம்): பூம்பாறை கிராமம் புழகவை பகுதியில் (சர்வே எண்: 331/5,331/1, 334/2A 335/4 மற்றும் 335/13 ) எங்களது குடும்ப நிலம் சார்ந்த பாதை விவகாரத்தில், 

 கொடைக்கானல் கோட்டாட்சியர் வழங்கிய தீர்ப்பை (நா. க. எண். 1787/99/ஆ5, தேதி: 24.11.1999), மதுரை உயர்நீதிமன்ற ரிட் மனு  வாயிலாக (WP(MD) 12829/2024) கொடைக்கானல் வட்டாட்சியர் 27.09.2024 அன்று உறுதி செய்துள்ளார். 

 இப்பாதையை பொது நலன் கருதி அரசுக்கு வழங்க நான் தயாராக உள்ளேன்.

 * வழக்கு 2 (ஆக்கிரமிப்பு விவகாரம்): சர்வே எண் 980/1-ல் உள்ள 1.8 ஏக்கர் நிலத்தில் எனது 'இயற்கை மருத்துவ பூங்கா' திட்டத்தை செயல்படுத்த முயலும்போது, சோரன்சிங் மற்றும் சிலர் வருவாய்த்துறை ஊழல் அதிகாரிகளின் துணையுடன் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்க முயல்கின்றனர்.

 2. அதிகாரிகளின் கடமை தவறுதல் (Dereliction of Duty):

• கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமம் சர்வே எண் 980/1 ல் சட்டத்திற்கு புறம்பாக சில வருவாய்த்துறை ஊழல் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு, போலியான பட்டாவை உற்பத்தி செய்து,  கிராம கணக்குகளில் தாக்கல் செய்துள்ளனர்

 *சர்வே எண் 331/5 ( 331/1C)ல்   எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 1.10 ஏக்கர் நிலத்தை பட்டா இருந்தும்,(கோட்டாட்சியர் உத்தரவு எண்: 3887/94அ 2,

dated 5-12-1994 ) அந்த நிலம் அரசு புறம்போக்கு என கூறி வேலிகள் அகற்றப்பட்டன.

 மேற்கண்ட விவகாரங்களில் முறையான நீதிமன்ற மற்றும் நிர்வாக உத்தரவுகள் இருந்தும், கீழநிலை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டனர். 

 குறிப்பாக, பூம்பாறை கிராமம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் L. தங்கராஜ் உள்ளிட்ட எதிர் தரப்பினரால் எனக்கு ஏற்பட்ட 60,000 ரூபாய் நிதி இழப்பு மற்றும் தொடர் மன உளைச்சலுக்கு அதிகாரிகளின் பாராமுகமே முக்கிய காரணம்.

 3. கோரிக்கை மற்றும் சட்டப்பிரிவுகள்:

இந்தச் சிக்கலுக்கு ஒரு சுமூகமான மற்றும் நிரந்தரத் தீர்வை எட்ட, தமிழ்நாடு வருவாய் விதிகளின் கீழ் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (முந்தைய CrPC / தற்போதைய BNSS 147-150) வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலக எல்லைக்குள் ஒரு நேரடி விசாரணை அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யக் கோருகிறேன்.

  * அனுமதி கோருதல்: வட்டாட்சியர் முன்னிலையில், மனுவில் குறிப்பிட்டுள்ள 10 எதிர் தரப்பினரையும் நேருக்கு நேர் அமர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி வேண்டுகிறேன்.

 * பாதுகாப்பு கோருதல்: நான் ஒரு முதியவர் என்பதாலும், எதிர் தரப்பினரால் அச்சுறுத்தல் இருப்பதாலும், இந்த நிகழ்வின் போது  எனக்கு உதவிட இரண்டு நபர்களை என்னுடன் வைத்துக் கொள்ளவும் எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

 * நிபந்தனை: இந்த நிகழ்வில் எட்டப்படும் முடிவுகள் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

 4. சமூகப் பொறுப்பு:

நல்லெண்ணத்தின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் நடக்கும் அனைத்து உண்மைச் சம்பவங்களையும் எனது சமூக வலைதளப் பக்கங்களில்( https://activismforfastjustice.blogspot.com/?m=1) பொதுமக்களின் பார்வைக்காகப் பகிர உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, எனது முதுமையைக் கருத்தில் கொண்டும், எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காணவும், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தகுந்த பாதுகாப்புடன் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்திட ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

 சாட்சி ஆவணங்கள்

1.13/03/1999 தேதி  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு  பூம்பாறை பொதுமக்கள் அனுப்பிய மனு நகல். 3 பக்கங்கள். 

2. கொடைக்கானல் கோட்டாட்சியர் வழங்கிய தீர்ப்பு (நா. க. எண். 1787/99/ஆ5, தேதி: 24.11.1999), . 4. பக்கங்கள்

3. மதுரை உயர்நீதிமன்ற ரிட் மனு எண் (WP(MD) 12829/2024)  மற்றும் சட்ட அறிவிப்பு  தேதி: 18/06./2024.  4. பக்கங்கள்

4.23/08/2024 தேதி நடந்த மக்களுடன் முதல்வர் முகாம் மனு எண்: MMCR/9896197. + கொடைக்கானல் வட்டாட்சியர் 27.09.2024 அன்று உறுதி செய்த உத்தரவு எண்.2166/2024-46/ஆ1.  3 பக்கங்கள். 

5. 15/08/2024. தேதி பூம்பாறை கிராமசபை கூட்டத்தில்  மேற்கண்ட பாதையை

 பொது பாதையாக்க 12/08/2024 தேதி பஞ்சாயத்து தலைவரிடம் கொடுத்த மனு.

6 07/10/2024 ம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சமர்ப்பித்த மனு.4 பக்கங்கள். 

7. 16/10/2024  ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பூம்பாறை பஞ்சாயத்து தலைவர் அவர்களுக்கு கொடுத்த மனு .2 பக்கங்கள். 

8. 24/10/2024 தேதி. கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனு. 1. பக்கங்கள். 

9. 11/11/2024. தேதி. கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனு. 1. பக்கங்கள்.

10. 19/11/2024. தேதி. கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனு. 1. பக்கங்கள்.

11. 20/03/2022 தேதி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கொடுத்த மனு எண்: TN /REV/DGL/1/PORTAL/20MAR22/3317187.

கொடைக்கானல் வட்டாட்சியர் தபால் என்: 1483/2022/ஆ 3 dated:07/04/2022.

12. 16/07/2025 தேதி கொடைக்கானல் வட்டாட்சியர் அவர்களுக்கு கொடுத்த மனு.

13. 16/07/2025 தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கொடைக்கானல் வட்டாட்சியர்,

கொடைக்கானல் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கொடுத்த மனு. 2. பக்கங்கள்.

14.18/01/2021 தேதி முதல் 2801/2025 வரை உள்ள RTI கோப்பு நகல்கள். 32. பக்கங்கள்.

(விசாரணையின் போது சாட்சி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் )

 எதிர் தரப்பினரின் பெயர் மற்றும் கைபேசி எண்கள் .

1.திரு. L. தங்கராஜ் அவர்கள்.  S/O. லட்சுமணன் சேர்வை Ex. ஊராட்சித் தலைவர்,  பூம்பாறை கிராமம்,  கொடைக்கானல். கைபேசி: 8098337793 

2. C. செல்வேந்திரன், மண்ணாடியார் தெரு, பூம்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம். கைபேசி 9342859402.

3. Dr G..P. பிரபு, MBBS  S/O, லேட் G பழனிச்சாமி சிவகங்கை ரோடு 

மதுரை. கைபேசி.87783 68727

 4.J. டேவிட், S/O. ஜெயராஜ்.  ஜெயராஜ் டிரேடிங் கம்பெனி,  சென்ட்ரல் மார்க்கெட் மதுரை கைபேசி எண்: 96006 17771.

 5. K.முஜிபுர் ரஹ்மான்,  S/O. லேட். காதர் முகமது, பிரபாகர் நகர். பூம்பாறை.

கைபேசி.7598038350.

 6. RM. ராஜேந்திரன், 4, கட்டபொம்மன் 4-வது தெரு, கொடுங்கையூர்,

 சென்னை - 600118. கைபேசி: 98409 944283

 7.B. பாவேஸ் B. ஷா, 41/33 மாண்டியத் ரோடு, எக்மோர், சென்னை - 600008

கைபேசி 9381013969.

 8.Dr. விவாகர் சென்னை

 9. சோரன்சிங் S/O.அந்தோணி பாம்பார்புரம் கொடைக்கானல்.கைபேசி 9443040170.

 10. பழனிச்சாமி பண்ணை மேலாளர் சோரன்சிங்.  கைபேசி.9486230245. 

 இப்படிக்கு,

 ஹாஜி.S.முஹம்மது

தேதி:21/02/2026.  இடம்: பெரியகுளம்.

 

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்