Posts

Showing posts from September, 2026

“தொலைத்த இடத்தில் தேடுகிறேன்” E Book.

    100 days Campaign 5 ம் நாள் பதிவு 6 . தேதி : 20/09/2026 “ தொலைத்த இடத்தில் தேடுகிறேன் ” E Book.     எனது இரு வேறுபட்ட மனநிலை : பகுதி 1 : Co operation not competition இந்த நீண்ட காலப் பிரச்சினையில் ஒருவருக்கொருவர்   மோதிக்கொள்வதாலோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலோ எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை . மாறாக , நடந்தேறிய தவறுகளை அவரவர்கள் உணர்ந்து , சமாதான முறையில் , பிரச்சனைகளுக்கான தீர்வு எட்ட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கருத்தை கடித வடிவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியப்படுத்துகிறது . பகுதி 2 : டாக்டர் விவாகர்  தரப்பினர் வழக்கம் போல் வெறும் ஆசை வார்த்தைகளால் காலத்தைக் கடத்த முயன்றால், X, Y மற்றும் Z நண்பர்கள் சென்ற வாரம் பரிந்துரைத்த கடுமையான எதிர்வினைத் திட்டங்களை ( கற்பனையாக ) நடைமுறை படுத்துதல் அத்துடன் இணைக்கப்பட்டது . இரண்டு பகுதிகளையும் சேர்த்து  6-வது பதிவாக பிளாக்கில் வெளியிடப்படுகிறது . : பகுதி 1: திறந்த தபால் கடிதம் பெறுநர்: டாக்டர் விவாகர் / கற்பகம் மற்றும் அவர்களின் பிர...

கொடைக்கானல் நடுவர்களுக்கான அழைப்பு ( VGP 2 )

பொதுவெளியில் விவாதம் மற்றும் மத்தியஸ்தக் கோரிக்கை அமைதியான மற்றும் சட்டப்பூர்வ தீர்வுக்கான திறந்த வேண்டுகோள் பெறுநர்: மதிப்பிற்குரிய கொடைக்கானல் நகர், பூம்பாறை மற்றும் பெரியகுளம் பகுதி முக்கியப் பிரமுகர்கள், ஜமாத் பெரியோர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும். பொருள் கொடைக்கானல் / பூம்பாறை மகாலட்சுமி கோவில் எதிர்புறம் அமைந்துள்ள எனது பூர்வீக மற்றும் அனுபவ பாத்தியப்பட்ட நிலம் தொடர்பாக நிலவி வரும் சட்டப் போராட்டங்கள், எல்லை ஆக்கிரமிப்பு முயற்சிகள் மற்றும் அதற்கான நியாயமான வாதங்கள் குறித்த ஆவண முன்வைப்பு – அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சுமூகமான நல்லிணக்கத் தீர்வு காண நடுநிலையான வழிகாட்டுதல் கோருதல் சார்பாக. விளக்க உரை வணக்கம். மேற்குறிப்பிட்ட நிலம் தொடர்பாக அரசு மற்றும் சட்ட ரீதியான ஆவணங்களின் அடிப்படையில் 'சட்டம் என்ன சொல்லுகிறது?' என்ற விரிவான விளக்கக் குறிப்பும், உரிமை ஆவணங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் முன்னிலையிலும், ஊரின் மதிப்பிற்குரிய நடுநிலையாளர்கள்...

சட்டம் என்ன சொல்லுகிறது ?? VGP CASE

​ சட்டம் என்ன  சொல்லுகிறது ?? “ பொதுவெளியில் விவாதம் ” E Book ஆசிரியர் : ஹாஜி S. முஹம்மத் . பெரியகுளம் .9345562420. தேதி : 10/09/2026. பகுதி 1: VGP வழக்கு மற்றும் நில உரிமைப் போராட்டம் ​1. முன்னுரை : சாமானியனின் அறப்போர் ! ​ தலைப்பு : பொதுவெளியில் விவாதம் - கொடைக்கானல் மாநகர மக்கள் மன்றத்திற்கு ஒரு மூத்த குடியின் திறந்த மடல் ! ​ பூம்பாறை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு , தற்போது பெரியகுளம் மாநகரில் எனது குடும்பத்துடன் வசித்து வரும் 75 வயது மூத்த குடிமகன் நான் . என்னைப் போன்ற ஒரு சாமானியன் , அளப்பரிய பண பலம் , ஆட்பலம் மற்றும் அரசியல் பின்னணியுடன் இருக்கும் நபர்களுக்கு எதிராக தனது வாழ்நாள் நில உரிமைக்காகச் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன் . ​ அரசாங்க அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக உரிய நீதி கிடைக்கத் தாமதமாகும் பொழுது , ஒரு சாமானியன் வேறு வழியின்றி மக்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான் . அந்த அறச்சீற்றத்தின் வெளிப்பாடுதான் இந்த “ பொதுவெளியில் விவாதம் ” . ம...