நேரலை விவாதம்: "மீசான் தராசு" -
நேரலை விவாதம்: "மீசான் தராசு" - சமரசப் பாதையில் ஒரு ஆரோக்கியமான உரையாடல் கடந்த ஒரு ஆண்ட காலமாக என் மனதில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் "பொதுவெளியில் விவாதம் / மீசான் தராசு" என்ற முயற்சியைப் பற்றி, என் நலனில் அக்கறை கொண்ட சில நண்பர்களோடு ஒரு தேநீர் நேர விவாதத்தில் ஈடுபட்டேன். அந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும், என் அடுத்தகட்ட நகர்வுகளுக்குத் தெளிவு தருவதாகவும் இருந்தது. அதை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பகுதி 1: பிரச்சனையின் பின்னணியும் அணுகுமுறையும் நண்பர்கள்: "ஜி, கடந்த ஒரு வருடமாக நீங்கள் பேசி வரும் இந்த 'மீசான் தராசு' கான்செப்ட் எதிர்பார்த்த முடிவைத் தராததற்கு இரு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, உங்கள் அணுகுமுறை எதிர்தரப்பினருக்குத் தற்காப்பு உணர்வை (Defensiveness) உருவாக்குகிறது; இரண்டு, அவர்களுக்குள் ஒரு தயக்கத்தை ஏற்படுத்துகிறது." நான்: "நண்பர்களே! தயக்கம் உருவாகிறது என்ற உங்கள் இரண்டாவது கருத்தை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், தற்காப்பு உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை என்னால் ஏற்க முடியாது. தயக்கத்தைப் போக்குவத...