பெரியகுளம் DSP நினைவூட்டல் கடிதம்.
ஒப்புதல் அட்டையுடன் பதிவுத்தவள். 17/11/25.
மனுதாரர்.
ஹாஜி.S.முஹம்மது, Age 74/25.
S/O. சேக் முஹம்மது பங்களாபட்டி ரோடு வடகரை. பெரியகுளம். கைபேசி: 9345562420.
பெறுநர்:
திரு. காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள்,
பெரியகுளம் சரகம் பெரியகுளம்
பார்வை:
Cheating (TN/HOME EXC / THN /P/PORTAL / 02NOV25 / 16694738.
பொருள்: நினைவூட்டல் கடிதம்
ஐயா,
பார்வையில் கண்ட எனது குறைதீர் மனுவில் கண்ட பொது ப்பாதை ஆக்கிரமிப்பை முறைப்படி ஆய்வு செய்து அகற்றி தர வேண்டிய பொறுப்பும் கடமையும், வருவாய்த்துறைக்கும்
மேற்படி பாதை ஆக்கிரமிப்பில் பெரும் பங்கு வகிக்கும் கந்து வட்டி குழுவின் சட்ட விரோத நடவடிக்கைகளை பெரியகுளம் நகரில் கட்டுப்படுத்தும் பொறுப்பும் கடமையும் காவல்துறையை சார்ந்தது என்பது எனது ஆழமான நம்பிக்கை.
பெரியகுளம் தாலுகா கிராமம் சர்வே எண் 1 2 3 4 5 மற்றும் 59/ 2. நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை முடக்கி உள்ளோம் என்பதையும், இதில் 80 % மேல் “பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை” சேர்ந்தவர்கள் என்பதையும், பாதை ஆக்கிரமிப்பு காரணமாக எங்கள் நிலங்களுக்குள் செல்ல முடியாத சூழலில் விரும்பத்தகாத இன மோதல்கள் உருவாகிவிடுமோ என்ற அச்சத்தாலும்
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
எனது பணிவான வேண்டுகோள்
74 வயது முதியவனாகிய எனக்கு “மறதி நோய்“ இருப்பதால் எனது வயதை கருதி, எனது குறைதீர் மனுவின் மீது தேவைப்படும் விரிவான விபரங்கள் சம்பந்தமாக தாங்கள் என்னிடம் விசாரிக்க இருக்கக்கூடிய கேள்விகளை எழுத்து ரூபத்தில் கொடுக்கும் பட்சத்தில் நான் அனைத்து கேள்விகளுக்கான சாட்சி ஆவணங்களை தங்கள் முன் சமர்ப்பிக்க வசதியாக இருக்கும் என்பதால் தங்கள் விசாரணை கேள்விகளை எழுத்து மூலமாக தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
2. தற்போது பெரியகுளம் வட்டாட்சியர் பொறுப்பில் இருக்கும் திரு மருது பாண்டியன், நில அளவையர் திரு.நீலமேகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி திருமதி, வித்யா ஆகியோர், மேற்படி பொதுப்பாதை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக தங்கள் கடமையை முறைப்படி செய்ய தவறிய காரணத்தால், எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் மற்றும் மன உளைச்சலுக்காக நஷ்ட ஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதால் தங்களின் சான்றிட்ட விசாரணை அறிக்கை ஒரு சாட்சி ஆவணமாக இருக்கும் என நம்புவதால்
எனது குறைதீர் மனுவை விசாரிக்க ஒரு தனி அதிகாரியை நியமனம் செய்யுமாறும், விசாரணை மற்றும் எமது மனு மீது எடுக்கப்படும் மேல் நடவடிக்கையை ஆவணப்படுத்துமாறும், அதன் பிரதியை சான்றிட்ட நகலாக எமக்கு அளிக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஹாஜி எஸ் முகமது. 17/11/2025.
இணைப்பு.
தமிழக முதல்வர் முகவரி துறைக்கு நான் அனுப்பிய மனு Cheating (TN/HOME EXC / THN /P/PORTAL / 02NOV25 / 16694738. (3 பக்கங்கள்)
2 16/52025 தேதி பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் மனு எண் 73/25.” (2 பக்கங்கள்)
3 04 /03/2025 தேதி தமிழக முதல்வரின் முகவரி துறையின் வழியாக சமர்ப்பித்த மனு எண்TN / HOMEEXC/ THN / P / PORTAL /04 MAR.25 / 11171442. நகல். (2 பக்கங்கள்)
Copy to:
வட்டாட்சியர் பெரியகுளம்.
பின்குறிப்பு:
நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேலே கண்ட மனு சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்பதையும் இறுதியில் புத்தகமாக வெளியிட இருக்கிறேன் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
Comments
Post a Comment