நான் எந்தளவிற்க்கு பாதுகாப்பாக இருக்கிறேன்? How Safe I am?

அறம் பாடி அழித்தல் .. "தீமையை" 

இன்றைய சிந்தனை தேதி:9/10/ 2024 
தலைப்பு : How Safe I am ?.Culturally Socially, Economically?
கலாச்சார ரீதியாக சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக நான் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறேன்?

 கலாச்சார ரீதியாக யோசித்தாள், இறை வேதமாகிய குர்ஆனும் எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலும் எனக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். ஆனால் நான் பிறந்து வளர்ந்த சூழல்  பொக்கிஷத்தை முழுமையாக கடைப்பிடிக்க முடியாத காரணத்தால்   நான் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக  பாதுகாப்பாக இல்லை.

  கீழே கண்ட தபால் இதை தெளிவாகும்.

மரியாதைக்குரிய பெரியகுளம் மக்கா பள்ளி தலைமை இமாமும் ஜமாத் தலைவருமான ஹஜரத் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) 
ஹாஜி. எஸ் முகமம்து ஆகிய நான் தங்கள் மஹல்லாவில் குடியிருந்து கொண்டு தாங்கள் பொறுப்பில் இருக்கும் பள்ளிவாசலுக்கு தலைக்கட்டு  வரி செலுத்தும் ஒரு குடும்பஸ்தனாவேன் . எனவே  எனக்கு சிலரால்  அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது, தங்களுடைய மேலான  கவனத்திற்கு கொண்டு வர வேண்டியது எனது கடமை என நம்புகிறேன்.  அதே நேரம், ஒரு விஷயத்தை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.இந்தக் கடிதத்தின் நோக்கம் தங்கள் மஹல்லாவில்  குடியிருக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பஸ்தனின் மனநிலையை  வெளிப்படுத்துவதை  தவிர வேறு எந்த விதமான உதவியும் எதிர்பார்த்து அல்ல.
         அதற்கு முன்  வெட்கத்தை விட்டு ஒரு விஷயத்தை தங்களுக்கு சொல்ல வேண்டும் ஹஜ்ரத்.  காலம் சென்ற எனது அத்தா ஷேக் முகமது ராவுத்தரிடம் நடந்த விசயத்தை தெளிவாக கூறினேன். "முட்டால் பயலே" என தகாத வார்த்தைகளை கூறி  எண்ணை திட்டி,  என் முகத்தில் காரி உமிழ்ந்தார்.அதுவும் வெத்தலை எச்சில் என்னுடைய வெள்ளை சட்டை கரை படிந்து விட்டது. 

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்
பெரியகுளம் வத்தலகுண்டு ரோட்டில் பங்களாப்பட்டி பிரிவு.10 எட்டுக்கும் குறைவாக ரஹ்மத் பள்ளிவாசல் கேட். 

எதிர் புறம் டீக்கடையில் ஒரு நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் "என் கழுத்தை அறுப்பேன் என்று சொன்னாய் அல்லவா உன் கழுத்தை அறுக்காமல் விடமாட்டோம் வாடா" என  குரல் எழுப்ப நான் "இங்கே வாங்கடா பார்த்துக் கொள்ளலாம்"  என  நானும் கூவினேன்
உண்மையில் சண்டை என்றால் எனக்கு பயம். ஒருவேளை அவர்கள் ரோடை கடந்து என் பக்கம் வந்தால் ரஹமத் பள்ளிக்குள் சென்று தப்பித்துக் கொள்ளலாம் என திட்டம்.
தங்களைப் போன்ற சமூகத் தலைவர்கள் கொடுக்க முடியாத பாதுகாப்பை இறை இல்ல வாளாகங்கள் கொடுக்கிறது ...தொடரும். 

தங்கள் பணிவுள்ள 

எஸ் முகம்மது.9345562420.

 பின்குறிப்பு :
நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளங்களில்,மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும்  அனைத்து நிகழ்வுகளையும்  தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன். 

1.  https://www.facebook.com/@hajishemd/?mibextid=ZbWKwL
2.  https://www.instagram.com/naturecureparkpoombarai?igsh=MXhuYm56Njh5Z3U=
3. https://chat.whatsapp.com/LZjxHCC9zh3ERpg4X7w4vL
4. https://youtube.com/@hajishemd?si=uk_LDjDddE4D5QK3
5.http://kodaikanalpropertyshop.blogspot.com/?m=1


Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்