என்னுடைய எதிரி யார்? Episode - 1.
என்னுடைய எதிரி யார்? Episode - 1.
என்னுடைய சிந்தனையும் செயலும் எப்படி எதை நோக்கி பயணிக்கிறது என்பதை எனக்கு படம் பிடித்து காட்டும் நண்பன்.
என்னுடைய சிந்தனையும் செயலும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் 1ஆம் தேதிக்கு முன்னால் எப்படி இருந்தது ஆகஸ்ட் 1 க்கு பின்னால் எப்படி இருக்கிறது?
" Rewind " எனது கடந்த கால வாழ்க்கையை ஒரு குறும்படம் போல் திரும்ப போட்டு பார்க்கிறேன்.
ஒரு சில மனிதர்களுடைய முகத்தை திருப்பிப் பார்க்கும் பொழுது எனது ரத்தம் எல்லாம் சூடு ஏறுகிறது ..எந்த அளவுக்கு என்றால் எனக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால்.. நான் ஒரு அரசனாக இருந்திருந்தால் அவர்களுடைய தலையை வெட்டி சிறைசேதம் பண்ண உத்தரவிட்டு இருப்பேன்.
இதுவே என்னுடைய கோபத்தின் அளவுகோல். இந்த மனநிலையின் பின் விளைவு என்ன தெரியுமா? எனது உடலும் உள்ளமும் சமநிலையை இழந்ததுதான் மிச்சம் .இதுவே 2024 ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னால் இருந்த மனநிலை.
இன்று ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி, அதே கேள்வி, என்னுடைய எதிரி யார்? என்னுடைய உண்மையான எதிரி சைத்தான்
சைத்தான் என்பவன் யார்? கெட்ட உண்மைக்கு புறம்பான ஒரு விஷயத்தை நல்லதைப் போல அலங்காரமாக காண்பிப்பான். அந்த ஒரு கெட்ட விஷயத்தை நன்மையானதாகவும் நீதியாகவும் நம்மை நம்ப வைத்து விடுவான்.
அவன் தான் சைத்தான்.
அவனே என்னுடைய உண்மையான எதிரி ....இந்த "கோல்டன் ரூல்" எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனத்திற்கே..
இந்த உண்மையை எனக்கு யார் புரிய வைத்தது?
எனது வாழ்க்கையின் வழிகாட்டி.
எனது எஞ்சிய வாழ்க்கையை ஒளிமயமாக அமைதியாக நிம்மதியாக எந்த விதமான மன உளைச்சலும் இல்லாமல் எனது ஆன்மாவையும் உடலையும் காப்பாற்றி அமைதியாக வாழ நான் வரித்துக் கொண்ட எனது குரு
எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முகம்மது நபி அவர்கள்.
அடுத்த EPISOD ல் சந்திப்போம்
Comments
Post a Comment