அறம் பாடி அழித்தல் .. "தீமையை" (Content)

அறம் பாடி அழித்தல் .. "தீமையை" (Content) 

முதல் கட்டம்  - அரசு அதிகாரிகள் :

என்னைப் போன்ற ஒரு மூத்த குடிமகன் மற்றவர்களின் தீய செயள்களால்  வஞ்சிக்கப்பட்டு, கஷ்ட நஷ்டத்தை அடையும் பொழுது, நிவாரணம் அல்லது நீதி கேட்டு முதல் கட்டமாக அரசு அதிகாரிகளையே அணுக வேண்டியது உலக நியதி. இதை யாரும் மறுக்க முடியாது .

கடந்த ஐந்து ஆண்டு காலமாக எனது பிரச்சினைகளுக்கு  தீர்வு காண நூற்றுக்கும் மேற்பட்ட மணுக்கள் மூலமாகவும் நேரிலும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை அணுகியதில் முடிவு "மன உளைச்சலும் விரக்தியும்" தான் மிச்சம்.


இரண்டாம் கட்டம்  - நீதிமன்றம் :

"பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட்டால்,  நீதித்துறையை அனுக வேண்டிய நிர்பந்தம், அதிக செலவு ,தாமதம் முதலியன தேவையில்லை விரும்பத்தக்கதும் இல்லை."

The pressure of the judicial process,  expensive and dilatory,  is neither necessary nor desirable if responsible bodies are  responsive to duties.Quoted  by justice Elope Dharmarao and K.K.Sasidharan J - 2011; inparagragraph 22 of order of W. A.No.1353 of 2010. Writ L .r.267. Writ Law Reporter march 2011.

மேலேகண்ட வார்த்தைகள் நான் கூறியது அல்ல,  மாறாக நீதிபதிகள் கூறியது.

இரண்டாம் கட்டமாக நான் நீதிமன்றத்தை  மட்டுமே அணுக முடியும், ஆனால் நீதிமன்றத்தின் மூலம் நீதியோ நிவாரணமோ எனக்கு கிடைக்காது என்பது எனது ஆழமான நம்பிக்கை. 

எனது நம்பிக்கையை டாக்டர்.ஆ. கிருஷ்ணமூர்த்தி எம்.பி.பி.எஸ் அவர்கள் எழுதிய "நீதிமன்றமும் அறமும்" என்ற நூலில் கீழ்க்கண்டவாறு உறுதிப்படுத்தி உள்ளார்.

1.பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு நீதிமன்றம் போனால் அவர்கள் அடையும் அவதிகள் இழப்புகள் பல.  இத்துடன் எப்போது தீர்ப்பு கிடைக்கும் என்பதும் தெரியாது. அந்தத் தீர்ப்பு சரியாக இருக்கும் என்பதும் நிச்சயம் இல்லை. தவறான தீர்ப்பும் கிடைக்கலாம். இதனால் இதற்காகவா நீதிமன்றம் போனும் என்று விரக்தி அடைந்தவர்கள் அடைபவர்கள் ஏராளம்.

2.மற்றவர்களது தீய செயளால் பாதிக்கப்பட்டவர்,  குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற காரணம் காட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த வழக்கு எப்போது முடியும் என்றும் யாருக்கும் தெரியாது. அந்த வழக்கில் முடிவு தெரியும் வரை குற்றவாளி தனது குற்றத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார்.  பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து பாதிப்பை அணிபவித்துக் கொண்டே இருப்பார். இதனால் நீதிமன்றங்களில் நீதி கேட்டு வழக்கு தொடர்வது எந்த தீர்வையும் எனக்கு  கொடுக்கப்போவதில்லை.

மூன்றாம் கட்டம் -  மக்கள் நீதி மன்றம் 

ஒரு திருடனுக்கு அல்லது விபச்சாரிக்கு தண்டனை அளிக்க வேண்டுமானால் அரசு தான் அளிக்க முடியும். குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் போது தான் அரசாங்கத்தின் உதவியோ அல்லது சட்டத்தின் தேவையோ ஏற்படுகிறது. எனது எதிர் தரப்பினரை தண்டிப்பது எனது நோக்கம் அல்ல. மாறாக நான் தேடுவது எனது பிரச்சனைகளுகான .தீர்வு .நீதியல்ல.

நீதியைத் தேடி நீதியும் கிடைக்காமல் நிம்மதியை தொலைத்தவன் என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தை நாட போகிறேன்.

மக்கள் மன்றத்தில் தீர்வு காண எனது செயல் திட்டம். 

எனக்குத் தெரிந்த ஒரே ஆயுதம்.... பேஸ்புக் இன்ஸ்டாகிராம் youtube  மற்றும் பிளாக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்கள் மன்றத்தில் என்னுடைய பிரச்சனைகளையும்  அந்தப் பிரச்சினைகளுக்கு   தீர்வு காண  என்து செயல்பாடுகளையும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கீழ்கண்ட  100 நபர்களுக்கு பகிர்வது. 

யார் அந்த நூறு நபர்கள்?

தற்போது பொறுப்பில் உள்ள 40 அரசு உயர் அதிகாரிகள் 40 மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் எனக்கு வழிகாட்டும் 20 சட்டம் தெரிந்த அறிவு ஜீவிகள் இந்தக் குழுவில் இடம் பெறுவர். 

இந்த நூறு தினங்களுக்குள் என்னுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு ஒரு ஆழ்ந்த அமைதியான சூழலில்  வாழும் நிலையை என்னை படைத்த ஏக இறைவன் கொடுப்பான் என ஆழ்ந்த நம்பிக்கையில் பிரார்த்தித்தவனாக கலம் கான துடிக்கிறேன்.

இவன். ஹாஜி.S.Mohemed. 9345562420.

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்