“தொலைத்த இடத்தில் தேடுகிறேன்” E Book.
100 days Campaign 5 ம் நாள்
பதிவு 6.தேதி: 20/09/2026
“தொலைத்த இடத்தில்
தேடுகிறேன்” E Book.
எனது இரு வேறுபட்ட மனநிலை:
பகுதி 1: Co operation not competition இந்த நீண்ட காலப் பிரச்சினையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதாலோ அல்லது
பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலோ எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக, நடந்தேறிய தவறுகளை அவரவர்கள் உணர்ந்து,
சமாதான முறையில், பிரச்சனைகளுக்கான தீர்வு
எட்ட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கருத்தை கடித வடிவில் சம்பந்தப்பட்ட
நபர்களுக்கு தெரியப்படுத்துகிறது.
பகுதி 2: டாக்டர் விவாகர்
தரப்பினர் வழக்கம் போல் வெறும் ஆசை வார்த்தைகளால் காலத்தைக் கடத்த
முயன்றால், X, Y மற்றும்
Z நண்பர்கள் சென்ற வாரம் பரிந்துரைத்த கடுமையான எதிர்வினைத்
திட்டங்களை (கற்பனையாக)
நடைமுறை படுத்துதல் அத்துடன்
இணைக்கப்பட்டது.
இரண்டு பகுதிகளையும் சேர்த்து 6-வது பதிவாக பிளாக்கில்
வெளியிடப்படுகிறது.:
பகுதி
1: திறந்த தபால் கடிதம்
பெறுநர்: டாக்டர் விவாகர் /
கற்பகம் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் (பொம்மயன், கணேஷ் பாண்டி மற்றும்
சம்பந்தப்பட்ட தரப்பினர்).
அனுப்புநர்: ஹாஜி S. முஹம்மத், பெரியகுளம். தொலைபேசி: 9345562420
பொருள்: தேனி சன் ஷைன்
எஸ்டேட் விவகாரம் மற்றும் சமரசத் தீர்வுக்கான இறுதி வேண்டுகோள்.
ஐயா, வணக்கம்.
கடந்த 2015-ஆம் ஆண்டு
கொடைக்கானல் பூம்பாறை நில விவகாரம் மற்றும் தேனி வீரபாண்டி குரு கார்டன் வீட்டு
மனைப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்களாலும், வில்லங்க மறைப்புகளாலும் கடந்த
7 ஆண்டுகளாக எனது கோடிக்கணக்கான ரூபாய் (ரூ. 60 லட்சம் மற்றும் இழப்பீடு) முடங்கிக் கிடக்கிறது. இதனால்
எனக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணா பொருட்சேதமும், மன உளைச்சலும் தாங்க முடியாதது.
இந்த நீண்ட காலப் பிரச்சினையில்
நாம் ஒருவருக்கொருور
மோதிக்கொள்வதாலோ
அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலோ எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்
. குரு கார்டன் லே-அவுட்டின் குடியிருப்பவர்கள் நலன் கருதி ஒரு ஆரோக்கியமான சங்கத்தை (கார்டன்
வில்லா) அமைப்பதிலும், மற்றும்
எனது பெண் மக்களின் எதிர்கால வாழ்வாதாரம்,
மற்றும் வளர்ச்சிக்காக முடங்கிய தொகையைச் சமரச முறையில் மீட்டெடுப்பதிலும் மட்டுமே
எனது சிந்தனையும் கவனமும் முழுமையாக உள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே
டாக்டர் விவாகர் அவர்கள் நேரில் சந்தித்த போது, "தவறு
செய்தது நான் தான்; அதைச் சரி செய்ய வேண்டியது எனது பொறுப்பு" என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு,
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளார்; இதற்குப்
பொம்மயன் அவர்களும் சாட்சியாக உடனிருந்தார்.
எனினும்,
பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து நாட்களைக் கடத்துவதும், காலதாமதம் செய்வதும்
எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. எனவே, எனது இடத்தில் உங்களை நீங்களே பொருத்திப்
பார்த்துக் கொள்ளுங்கள்: "இதே நிலை உங்களுக்கோ அல்லது உங்கள்
குடும்பத்தினருக்கோ ஏற்பட்டு, உங்கள் கடின உழைப்புப் பணம் 7 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்தால்
இவ்வளவு காலம் அமைதியாகக் காத்திருப்பீர்களா?" என்ற எனது இந்தக் கேள்வியை உங்கள்
மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்.
தேவையற்ற
சட்டப்போராட்டங்களோ அல்லது குற்றவியல் மோசடி வழக்குகளைத் தீவிரப்படுத்துவதோ
யாருக்கும் எந்த நன்மையும் தரப் போவதில்லை. எனவே, நாம் அனைவரும் சுமுகமான
முறையில், எவ்வித பகையுணர்வும் இன்றிச் சமரசப் பாதையில் பயணித்து, முடங்கிய தொகையை
மீட்டெடுப்பதற்கான இறுதித் தீர்வை (Settlement Plan) உடனடியாக வழங்க வேண்டும் என்பதே எனது
தற்போதைய வேண்டுகோள் ஆகும்.
பகுதி
2: எதிர்வினை மற்றும் அடுத்த கட்டச் செயல்தட்டம் (Action
Plan - கற்பனை & நடைமுறை
வரைவு)
(மேற்கண்ட
சமரசத்திற்கு மாறாக, டாக்டர் விவாகர் தரப்பு தொடர்ந்து காலத்தைக் கடத்தினால்
அல்லது ஏமாற்ற முயன்றால், நண்பர்கள் X, Y மற்றும் Z ஆகியோரின் ஆலோசனையின்படி
செயல்படுத்தப்பட வேண்டிய கடுமையான திட்ட வரைவு)
கடும் காலக்கெடு
மற்றும் இறுதிக் எச்சரிக்கை:
- எழுத்துப்பூர்வமான
முறையான சமரச ஒப்பந்தம் (Settlement Agreement): இனி
வெறும் வாய்மொழி வாக்குறுதிகள் எடுபடாது. ஒப்புக்கொண்ட மொத்தத் தொகை,
செலுத்தும் காலக்கெடு மற்றும் வங்கி விவரங்கள் அடங்கிய சட்டப்பூர்வ
முத்திரைத் தாள் ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்து பெறப்படும்.
- பிணையக்
காசோலைகள் (PDC - Section
138 NI Act):
ஒப்புக்கொண்ட
தொகைக்குத் தேதியிட்ட வங்கிக் காசோலைகள் உடனடியாகப் பெறப்பட்டு சட்டப்பூர்வ
பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
- கெடு மீறல்
மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை (Cheating & Forgery):
- கொடுக்கப்பட்ட
கெடுவிற்குள் முறையான தீர்வு கிடைக்காவிட்டால், சமரச முயற்சியைக்
கைவிட்டுவிட்டு, நீதிமன்றத்தின் மூலமாக குற்றவியல்
மோசடி மற்றும் ஆவண மோசடிப் புகாரை (Cheating & Forgery) மிகத்
தீவிரமாக முன்னெடுக்கப்படும்.
- மாவட்டக்
குற்றப்பிரிவு (District
Crime Branch) மற்றும்
பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) மூலம்
சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைத்துச் சொத்துகளும்
முடக்கப்படும். குறிப்பாக,
கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் நான் சஞ்சய் எஸ்டேட்
கொடுத்த நிலத்தை முழுமையாக வாய் இனத்தில் எடுத்து விவசாயம் பண்ணுவதன் மூலம்,
அந்த நிலத்தை கிரையம் பதிந்தவர்களுக்கு சட்ட ரீதியான
அழுத்தத்தை கொடுப்பது.
- சமூக மற்றும்
பொதுவெளி வெளிப்பாடு: தவறு
செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, அவர்களின் தொடர் ஏமாற்று
வேலைகளைப் பொதுவெளியிலும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் விரிவான
ஆவணங்களாக வெளியிடப்படும்.
உரிமையுடன் மற்றும்
அமைதியுடன், ஹாஜி S. முஹம்மத்
பெரியகுளம் தொலைபேசி: 9345562420
Comments
Post a Comment