Experiment - 1 . பொதுவெளியில் விவாதம்.
உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மனு.
( பதிவு தபால்/ நேரிலும் சமர்ப்பிக்கப்படுகிறது)
விடுநர்:
ஹாஜி.S.முஹம்மது,
S/O. சேக் முஹம்மது
பங்களாபட்டி ரோடு வடகரை. பெரியகுளம்.
தேனி மாவட்டம். 9345562420
பெறுநர் :
1. திரு வட்டாச்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம் கொடைக்கானல்.
2. திரு காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் நிலையம்
கொடைக்கானல்
ஐயா .
பொருள்:
"பொதுவெளியில்விவாதம்" https://activismforfastjustice.blogspot.com/
என்ற நிகழ்வை கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலக எல்லைக்குள் நடத்துவதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி பணிந்து சமர்ப்பிக்கும் மனு.
கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட 74. வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். பூம்பாறை கிராமம், மகாலட்சுமி கோயிலுக்கு எதிர் புறம் சர்வே எண் 980/2, 980/4, மற்றும் 976 , ல் 6.20 ஏக்கர் நிலம் சம்பந்தமாக சென்னையைச் சேர்ந்த விஜிபி கம்பெனிக்கும் எனக்கும் ஒரு வழக்கு நடந்து வருகிறது. மேற்படி பட்டா நிலத்தின் அருகில் சர்வே எண் 980/1 ல் சுமார் 1.8 ஏக்கர் தீர்வை ஏற்பட்ட தரிசு ( பட்டா இல்லாத) நிலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எனது பராமரிப்பில் இருந்து வருகிறது.
நான் வெளியூரில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கொடைக்கானல் டவுன், பாம்பார் புரத்தில் குடியிருந்து வரும் அந்தோணி மகன் சோரன்சிங் என்ற நபர் வருவாய்த் துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகளின் துணையுடன் போலியான ஒரு பட்டாவை உற்பத்தி செய்து மேற்கண்ட நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை அறிந்த நான் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து மேற்கண்ட பட்டாவை ரத்து செய்ய கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறேன்.
மேலே கண்ட சர்வே எண் 980/1 நிலத்தில் எனது "இயற்கை மருத்துவ பூங்கா" திட்டத்தை அமைப்பதற்கான முயற்சியில் அடிப்படை வேலைகள் தொடங்கப்பட்டதை 16/07/2025 தேதி பதிவு தபால் மூலமாக தங்களுக்கு தெரிவித்ததை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
எனது பணிவான வேண்டுகோள் :
சுருங்கக் கூறின், ஒரு குற்றம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் நடப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை என, இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது.
மேற்கண்ட நபர் ஆட் பலமும் பண பலமும் அரசியல் செல்வாக்கும் மிக்கவர். என்மேல் கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்தவும், பொய் வழக்குகளை என் மேல் பதிவு செய்து எனது நடவடிக்கைகளை முடக்குவார் என அஞ்சம் சூழலில்.
கொடைக்கானல்
1. திரு. குரியன் ஆபிரகாம், முன்னாள் நகர்மன்ற தலைவர் அவர்கள்,,
2. ஜனாப். S. அப்துல் கனி ராஜா . சாலிகா ஹோட்டல், கொடைக்கானல் நகர காங்கிரஸ் பிரமுகர்
ஆகிய இருவர் முன்னிலையில் மேற்படி சோரன்சிங்கும் நானும் நேருக்கு நேர் உட்கார்ந்து கலந்துரையாடல் மூலம் ஒரு சமாதான தீர்வை அடைய முயற்சிக்கிறேன்.
எனவே எனது கோரிக்கையை ஏற்று, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 தேதியில் இருந்து 10 ம் தேதிக்குள், ஒரு தினத்தில் "பொது வெளியில் விவாதம் "என்ற சொற்போர் நிகழ்வை நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எதிர் தரப்பினரின் பெயர் மற்றும் கைபேசி எண்கள் .
1.சோரன்சிங் S/O.அந்தோணி பாம்பார்புரம் கொடைக்கானல்.கைபேசி 9443040170.
2.பழனிச்சாமி பண்ணை மேலாளர் சோரன்சிங். கைபேசி.9486230245.
இப்படிக்கு
தங்கள் பணிவுள்ள,
எஸ் முஹம்மது 26/07/2025.
பின்குறிப்பு : நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளத்தில் மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
https://activismforfastjustice.blogspot.com/
Comments
Post a Comment