Experiment - 3 .SUN SHAIN ESTATE CASE.
பொதுவெளியில் விவாதம்
https://activismforfastjustice.blogspot.com/
( பதிவு தபால் )
விடுநர்:
ஹாஜி.S.முஹம்மது,
S/O. சேக் முஹம்மது
பங்களாபட்டி ரோடு வடகரை.
பெரியகுளம்.
தேனி மாவட்டம். 9345562420
பெறுநர் :
1. திரு.பொம்மையன்
S/O. சின்னராஜ், குரு கார்டன் சத்திரப்பட்டி ரோடு வீரபாண்டி அஞ்சல் தேனி
கைபேசி: 8825 46 38 10
2. திரு எம்.கணேஷ் பாண்டி
S/O. முத்தையா
சத்திரப்பட்டி ரோடு, தேனி கைபேசி 97 89 26
67 89
அன்புடையோர் வணக்கம்,
இந்த தபாலை எழுத தொடங்கிய போது என்னுடைய மனதில் எழுந்த நான்கு கேள்விகளும்
பதிலும்.
1. தேனி சன் சைன் உரிமையாளர்கள் விவாகர்/ கற்பகம் தம்பதியர்களுக்கும் எனக்கும் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் வழக்கில், தங்கள் இருவருக்கும் உள்ள சம்பந்தம் என்ன?
~. தேனி, சத்திரப்பட்டி ரோடு, குரு கார்டன் லே அவுட்டிற்கான
நிலத்தை வாங்கி கொடுத்ததில் இருந்து இன்று வரை விவாகர்/ கற்பகம் தம்பதியருடன்
கைகோர்த்து பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அவர்களுடைய சுக துக்கங்களில்
சமபங்கேற்பவர்கள். சுருங்க கூறின் அவர்களுடைய விலாசம் கைபேசி எண் உங்கள் இருவரை
தவிர வேறு யாருக்கும் தெரியாது.
~. அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுக்கும் எனக்கும் மத்தியில் மத்தியஸ்தம் பண்ணுவதற்கு 28/09/2022 ம் தேதி பதிவு செய்யப்படாத ஒரு ஒப்பந்தத்தை எழுதி அந்த ஒப்பந்தம் எனது செயல்பாடுகளை முடக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது
~. மூன்று ஆண்டுகளுக்குப் பின் சென்ற ஜூன் மாதம் தாங்கள் இருவரும் பெரியகுளத்தில் என்னை நேரில் சந்தித்ததும், அதன்பின் சென்ற 30 6 2025 ஆம் தேதி நாம் மூவரும் பூம்பாறை கிராமத்திற்கு சென்று நான் சன் சைன் எஸ்டேட்டிற்கு கொடுத்த நிலங்களின் இன்றைய சூழ்நிலையை ஆய்வு செய்து ஆலோசனை பண்ணியதையும் தங்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.
2. நீங்கள் இருவரும் ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்ன ?
தேனி சன் சைன் உரிமையாளர்கள் விவாகர்/ கற்பகம் தம்பதியர்களுக்கும் எனக்கும் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் வழக்கை எங்கள் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சமாதான தீர்வை கொண்டுவர முடியும் என எனக்கு வாக்களித்துள்ளீர்கள்.
3. நீங்கள் இருவரும் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்ற முடியாத காரணம் என்ன?
~. விவாகர் கற்பகம் தம்பதியரின் நோக்கம், பொய்யான
வாக்குறுதிகளை கொடுத்து தங்கள் இருவரையும் பயன்படுத்தி, எனது செயல்பாடுகளை
முடக்குவது. என்னைப் போலவே நீங்கள் இருவரும் அவருடைய உள்நோக்கம் அறியாமல்
அவர்களுடைய கைபாவையாக செயல்படுவதாக நான் நம்புகிறேன்.
4. என்னுடைய எதிர்பார்ப்பு மற்றும் வேண்டுகோள் என்ன ?
எனது வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தை அணுக முடியாத ஒரு சூழல் .
எனது பிரச்சனைக்கு சமாதான தீர்வு கிடைக்கும் என்ற நட்பாசையில் அரசு அதிகாரிகள் முன்பாக. அரசு அலுவலக வளாகத்தில் “பொதுவெளியில் விவாதம்" என்ற “சொற்போர்” வழிமுறையை அமல்படுத்துகிறேன்.
எனவே,
தாங்கள் இருவரும், சன் எஸ்டேட்
உரிமையாளர்கள் விவாகர் கற்பகம் தம்பதியரிடம் பேசி இன்றிலிருந்து 30 தினங்களுக்குள்
ஒரு தேதியை முடிவு செய்யுமாறும், அன்றைய தேதியில், தேனி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாளாகத்தில் அவரின் அனுமதி பெற்று,நாம்
அனைவரும் உட்கார்ந்து நேருக்கு நேர் கலந்துரையாடல் மூலம் எனது பிரச்சனைக்கு ஒரு
முடிவை கொண்டு வர வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஹாஜி. எஸ். முஹம்மது 18/8/2025.
நகல்.
1. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேனி
2. திரு ராமானுஜம் அவர்கள், அடிப்படை உரிமைகள்
பாதுகாக்கும் சங்கம் ஆண்டிபட்டி
3. திரு பா முருகன், பாதிக் கபட்டோர்
கழகம் கழகம். தேனி
4. திரு கணேசன் Msc.,BL வழக்கறிஞர் தேனி
5. திரு சந்திரன்,Bcom.,LLB. வழக்கறிஞர்
சத்திரப்பட்டி, தேனி
பின்குறிப்பு.
1. எனது வழக்கின் சாரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூம்பாறை
கிராமம் ச.என். 330/12,330,11,331/1 ல் 4 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை, சன் சைன் எஸ்டேட்
உரிமையாளர்கள் விவாகர் / கற்பகம் தம்பதியருக்கு, 2015 ஆம் வருடம் பரிவர்த்தனை
மூலமாக கிரையம் பதிந்து கொடுத்தன்
அடிப்படையில் - தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமம் குரு கார்டன் லே
அவுடில் இரண்டு வீடுகளை என் பெயரிலும் எனது மனைவி பெயரிலும் கிரையம் பதிந்து வாங்கியதில் - மேற்படி வீடுகளை
, எனக்கு கிரயம் பதிந்து கொடுத்த அதே விவாகர்,
திருச்சியை சேர்ந்த விமல் ஜான் , ரமேஷ் ஆகிய இரண்டு நபர்கள் பெயரில் தனது சொந்தச்
செலவில் இதே வீடுகளை கிரயம் பதிந்து - அதே நாளில்,
மதுரை அலகாபாத் வங்கி கிளையில் ரூ. 32,00,000/- அடமான கடண்
வாங்கியிருந்ததை மறைத்து, மேற்படி விவாகர் கற்பகம் தம்பதியர், என்னை ஏமாற்றிய
வழக்கில் - கடந்த ஐந்து ஆண்டு காலமாக, காவல்துறை - வருவாய்த்துறை - பதிவுத்துறை
போன்ற அரசு நிறுவனங்களில் போராடி தீர்வு கிடைக்காத விரக்தியிள் “பொதுவெளியில் விவாதம்" என்ற “சொற்போர்” வழிமுறையை அமல்படுத்துகிறேன்.
2. நல்லெண்ணத்தின் அடிப்படையில் எனது சமூக வலைத்தளத்தில்
மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து
நிகழ்வுகளையும் தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு
வைக்கிறேன்.
Comments
Post a Comment