Experiment - 3 . Sun Shine Street Estate Vs. Police Department


Experiment -3 

Note: 30/08/2025 ஆம் தேதி வீரபாண்டி காவல் நிலையத்தில் கீழே கண்ட சமர்ப்பித்தேன். காவல் நிலைய அதிகாரிகள் எனது மனுவை வாங்க மறுத்ததால் கீழே கண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியாமல் போனது.

பொதுவெளியில்விவாதம்

https://activismforfastjustice.blogspot.com/

       ( பதிவு தபால் )

விடுநர்:

ஹாஜி.S.முஹம்மது,

S/O. சேக் முஹம்மது 

பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம்.l

தேனி மாவட்டம். . 9345562420


பெறுநர் :

1 திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள், 

வீரபாண்டி காவல் நிலையம் வீரபாண்டி தேனி, 

2.  திருமதி  பேரூராட்சி தலைவர் அவர்கள் வீரபாண்டி பேரூராட்சி .வீரபாண்டி.


ஐயா,

74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்

. இணைப்பு 1. ல் கண்ட பதிவு தபாலை, சென்ற 18 8 2025 ஆம் தேதி சத்திரப்பட்டி குரு கார்டனில் குடியிருந்து வரும் திரு. பொம்மையன் மற்றும் திரு. கணேஷ் பாண்டி ஆகிய இருவருக்கும்  அனுப்பி இருந்தேன். மேற்படி தபாலை பொம்மையன் மற்றும் கணேஷ் பாண்டி ஆகிய இருவரும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.

 மேற்படி பதிவு தபாலை  பொம்மையன், கணேஷ் பாண்டி, மற்றும் நமது பகுதியில் உள்ள பிரமுகர்கள் 10 பேருக்கு  அவர்கள் வீட்டில் நேரில் சந்தித்து கொடுப்பது என முடிவெடுத்து, சென்ற 21 /8/25 ம் தேதி காலை சுமார் 12 மணி அளவில் பழனி செட்டிபட்டி காவல் நிலைய பொறுப்பில் இருந்த காவல் அதிகாரியை நேரில் சந்தித்து இணைப்பு   2. ல்  கண்ட தபாலை தகவலுக்காக கொடுத்தபோது, எனது பிரச்சனையை தெளிவாகவும் பொறுமையாகவும் கேட்டறிந்த காவல் அதிகாரி  "தங்கள் வழக்கு முழுக்க முழுக்க சிவில்  தன்மையாக  இருப்பதால், நீதிமன்றத்தை அணுகியே நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும். இதில் காவல்துறை எதுவும் செய்வதற்கு இல்லைஎன அறிவுரை கூறினார். 

எனவே, 

1. எனக்கும்  சன் சைன்  எஸ்டேட் க்கும் மத்தியில் நடக்கும் வழக்கு சிவில் தன்மையுடையதா ? கிரிமினல் தன்மையுடையதா ?, 

2.  இந்த வழக்கில் எனது மேல் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் ? என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதிலை கண்டுபிடிக்க,

  நாளை 31/08/25. தேதி பகல் 11 to 12 மணிக்குள்,  வீரபாண்டி ஊராட்சி  மன்ற மைதானத்தில்  உள்ள, மரத்தின் அடியில் உட்கார்ந்து, திரு 

அல்லிநகரம்  சுப்புக்காளை 9842824562 அவர்கள் தலைமையில் தேனி டவுனை சேர்ந்த மூன்று  வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்கள், அதிகபட்சம் 10 நபர்களுக்கு மிகாமல்  அழைத்து வந்து ஆலோசனை கேட்க உள்ளேன் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

இப்படிக்கு 

ஹாஜி எஸ் முகமத் .30/08/25.

இணைப்பு: 4. பக்கங்கள் 8/08/25 , 21/08/25 தேதி தபால்.

 நகல்: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேனி.

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்