Experiment -2.Poombarai Road Issue.
பொதுவெளியில் விவாதம்
https://activismforfastjustice.blogspot.com/
( பதிவு தபால் )
ஹாஜி.S.முஹம்மது,
S/O. சேக் முஹம்மது பங்களாபட்டி ரோடு வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம். 9345562420
பெறுநர் :
திரு. L. தங்கராஜ்
அவர்கள்.
S/O. லட்சுமணன் சேர்வை Ex. ஊராட்சித் தலைவர், பூம்பாறை கிராமம், கொடைக்கானல். கைபேசி: 8098337793
ஐயா,
பூம்பாறை கிராமம் சர்வே எண் 331/1 C, ( 330/5 ) எனக்கு சொந்தமான இடத்தில், தாங்களும் தங்களை சார்ந்தவர்களும் என்னுடைய அனுமதி இல்லாமல் ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதும், என்னுடைய இடத்தில் இருக்கும் மின்சார கம்பத்தில் ( சிசிடிவி ) கேமராவை பொருத்தி என்னுடைய நடவடிக்கைகளை கண்காணிப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
நான் பலமுறை
தங்களிடமும் தங்களைச் சார்ந்தோரிடமும் நேரில் எச்சரித்தும்,
எனது வார்த்தைகளை உதாசீனப்படுத்துவது, தங்களின் ஆணவ போக்கை காட்டுகிறது. தங்களின்
இந்த நடவடிக்கை 74 வயது மூத்த குடியான
என்னை மிகுந்த மன உழைச்சலுக்கு ஆட்படுத்துகிறது.
25 ஆண்டுகளுக்கு
முன்பு பூம்பாறை கிராமம், புழகவை பகுதியில் எங்கள்
கூட்டுக் குடும்ப பட்டா நிலங்களில் சுமார் 15 ஏக்கர் நிலத்தை நான்கு நபர்களுக்கு
விற்றதில், எனக்கும் என்னிடம் நிலம் வாங்கிய நபர்கள் மற்றும்
அருகிலுள்ள சிறிய குரு விவசாயிகள்
மத்தியில் நடைபாதை சம்பந்தமாக கருத்து வேறுபாடு
ஏற்பட்டு சில வழக்குகள் உற்பத்தியாகி, இறுதியாக கொடைக்கானல் கோட்டாட்சியர் நடுவர்
மன்றம் தீர விசாரித்து ஒரு தீர்ப்பு ( நா. க. என். 1787 / 99 / ஆ 5.
தேதி : 24 .11. 1999 ) வழங்கியது என்றும், அதேபோல் கடந்த ஆண்டு சில சுயநல
வாதிகளால் பாதை சம்பந்தமாக சில பிரச்சனைகள் ஏற்பட, நான் மதுரை
உயர்நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனு ( WP.( W.D)
12829 தேதி : 18 .06. 2024 )தாக்கல் செய்து அதன் அடிப்படையில் சென்ற 27. 09.2024 ம்
தேதி ( நா. க. என். 2166 / 2024 . 46 / ஆ 1.) கொடைக்கானல் வட்டாட்சியர், கோட்டாட்சியர்
நடுவர் மன்ற தீர்ப்பை உர்ஜிதம் செய்துள்ளார் என்பதையும் தங்களின்
மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
மண்ணின் மைந்தன் என்ற முறையில், எதிர்கால
சந்ததிகள் நலன் கருதி , மேற்கண்ட பாதையை அரசுக்கு எழுதிக்
கொடுப்பதன் மூலமாக பொதுப்பாதை ஆக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கோரிக்கை.
எனவே,
தங்கள் தலைமையில்
ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை தாங்களே அமைக்க
வேண்டும் என்றும் அந்தக் குழு பொதுவெளியில்
விவாதம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் நாம் அனைவரும் சேர்ந்து
பாதைக்காண நிலத்தை அரசுக்கு எழுதிக் கொடுப்பதன் மூலம் மேலே கண்ட பாதையை பொதுப்
பாதையாக்குவதன் மூலம் பாதை பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை அடைய ஒத்துழைப்பு
கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவன்.
ஹாஜி. எஸ் . முஹம்மது. 16 / 08 / 2025.
1. திரு. வட்டார வளர்ச்சி அதிகாரி (BDO) அவர்கள், வட்டார வளர்ச்சிஅலுவலகம், அண்ணா நகர், கொடைக்கானல்.
2. திரு காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் நிலையம் கொடைக்கானல்.
பின்குறிப்பு:
நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேலே கண்ட பாதை
சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் என்னுடைய சமூக வலைத்தளத்தில்
வெளியிடுகிறேன் என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
Comments
Post a Comment