"திருடன் கையில் சாவி பூம்பாறை நில விவகாரம் மற்றும் சட்டப் போராட்டம் — இரண்டாம் பிரசுரம்

திருடன் கையில் சாவி

பூம்பாறை நில விவகாரம் மற்றும் சட்டப் போராட்டம் — இரண்டாம் பிரசுரம்


1. நூலின் முகவுரை: மூன்று கேள்விகளும் உண்மையும்


நீதி என்பது பலவீனமானவர்களின் குரலாக இருக்கும்வரை, அதிகாரம் படைத்தவர்கள் அதை எளிதாகக் கடந்து சென்றுவிடுவார்கள். பூம்பாறை மலைக்கிராமத்தின் நிலப்பரப்பில் மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த ஏமாற்றங்களும், அதிகார மௌனங்களும் என்னை நோக்கி வீசிய மூன்று சவாலான கேள்விகள்தான் இந்த ஆவணப் பதிவின் தொடக்கப் புள்ளி.

சட்டமும் நியாயமும் எனது பட்டா நிலத்தை உறுதி செய்தபோதிலும், களத்தில் நின்றவர்கள் என்னை நோக்கி ஏளனமாகவும் அச்சுறுத்தும் தொனியிலும் மூன்று கேள்விகளை முன்வைத்தார்கள்:

  • "இந்த இடத்தை நீர் எங்களுக்குத் தெரியாமல் தொடக்கூடாது!" — சட்டப்பூர்வ உரிமையாளரின் அதிகாரத்தைக் குழிதோண்டிப் புதைக்க நினைத்த ஆக்கிரமிப்பு மனநிலையின் முதல் குரல்.

  • "இந்த இடம் உனக்குச் சொந்தமாக இருந்தால் நீ அளந்து எடுத்துக் கொள்!" — முப்பது ஆண்டுகால நில ஆவணங்களையும் அரசு சர்வேயின் வலிமையையும் கேலி செய்த அறியாமையின் இரண்டாவது சவால்.

  • "உன்னிடம் நாங்கள் ஏன் எழுத்துப்பூர்வமான அனுமதி வாங்க வேண்டும்?" — சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணைகளையும் (WP(MD) No. 12829/2024), கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியரின் CrPC 145(1) உத்தரவுகளையும் துச்சமாக மதித்துத் தன்னிச்சையாகச் செயல்பட்ட போக்கின் மூன்றாவது கேள்வி.

2. கேள்வி 1: "இந்த இடத்தை நீர் எங்களுக்குத் தெரியாமல் தொடக்கூடாது!"


கேள்வியை முன்வைத்தவர்: திரு. K. அப்துல் சமது (மறைந்த காதர் முஹம்மத் அவர்களின் இரண்டாவது மகன், பிரபாகர் நகர், பூம்பாறை) — கைபேசி: +91 94876 60650

தம்பி K. அப்துல் சமது அவர்களுக்கு நினைவூட்டல்:

இஸ்லாமிய மரபுப்படி ஒரு மனிதன் தனக்கு முந்திய மூன்று தலைமுறைகளை அறிந்திருக்க வேண்டும். பூம்பாறை கிராம நாட்டாமை குடும்பத்திற்கும், உங்கள் பாட்டனார் யூசுப் ராவுத்தர் குடும்பத்திற்கும் உள்ள பிணைப்பு 120 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி கொண்டது. பூம்பாறை புலகவை மற்றும் காஞ்சாரை காடு பகுதியில் முதன்முதலில் கால் பதித்தது பொன்னையா ராவுத்தரா அல்லது காதர் முஹம்மதா என்பதை மூத்தவர்களிடம் கேட்டுப்பார்; உண்மை விளங்கும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு இதே பாதை விவகாரத்தில் உமது தந்தை காதர் முஹம்மதுடன் விவாதம் நடந்தபோது நீ பேசிய தகாத வார்த்தைகளுக்காகவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது (FIR No: 190/99, நாள்: 07/05/1999). அப்போது நீ படித்துக் கொண்டிருந்ததால் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் உனது அண்ணன் முஜிபுர் ரஹ்மான் பெயரை புகாரில் குறிப்பிட்டேன். உனக்காக அந்த வேதனையை உன் அண்ணன் சுமந்தார். 2007-ல் காதர் முஹம்மத் தொடர்ந்த சிவில் வழக்கின் (O.S.No. 261/2007) முடிவும் என்னவென்று உங்களுக்குத் தெரியும்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பூம்பாறை உயர்நிலைப்பள்ளி அருகில் சர்வே எண் 331/5 (331/1c)-ல் 1.10 ஏக்கரில் பள்ளிச் சாலைக்கு விட்டது போக மீதியுள்ள 40 சென்ட் நிலத்தில் நான் வேலி அமைத்தபோது, முஜிபுர் ரஹ்மான் பேசிய வாதங்களுக்கு சட்ட உண்மைகளை உணர்த்தியபோது, "எங்கள் நிலத்தை சுற்றி உங்கள் நிலம்தான் இருக்கிறது, நாளை மறுமை நாளில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறி முடித்தார். ஆவணங்களை பொது விவாத மேசைக்குக் கொண்டுவரும்போது நீங்கள் அனுபவிக்கும் நிலங்களுக்கும் ஆவணங்களுக்கும் உள்ள தொடர்பு வெட்டவெளிச்சமாகும்.

3. கேள்விகள் 2 & 3: எல்லை அளவீடு மற்றும் எழுத்துப்பூர்வ அனுமதி விவகாரம்


கேள்விகளை முன்வைத்தவர் (சுற்றுலாத்துறை வணிகர் சார்பாக): திரு. MPL. தங்கராசு (முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்) — கைபேசி: +91 80983 37793

மதிப்பிற்குரிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர் MPL. தங்கராசு அவர்களுக்கு:

உங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் 'MPL' என்ற எழுத்துக்கள் உங்கள் தாத்தா 'மோடன் வீட்டு பழனிச்சாமி' அவர்களின் பெருமையைக் குறிப்பவை. சுதந்திரத்திற்குப் பின் பூம்பாறையின் முதல் பஞ்சாயத்து தலைவராக அவர் பொறுப்பேற்றபோது, என் தந்தை பொன்னையா ராவுத்தர் அந்த போர்டில் உறுப்பினராக இருந்த வரலாற்றுப் பிணைப்பை ஆவணப் புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.

எச்சரிக்கை: தங்களுக்கும் எனக்கும் நில எல்லைப் பிரச்சனை இல்லை. ஆனால், மதுரையைச் சேர்ந்த காலம் சென்ற ஜி. பழனிச்சாமி நாடார் - ஜெயச்சந்திரன் நாடார் குடும்பத்தினருக்கும், காலம் சென்ற முத்துச்சாமி மன்றாடியார் குடும்பத்திற்கும் மட்டுமே சொந்தமான பாதை எனத் தாங்கள் உரிமை கொண்டாடும் விவகாரத்தில் சட்டத்தை மதிக்க வேண்டும். மீறினால் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்க நேரிடும். அறிந்தே செய்யும் தவறுகளுக்கு இரட்டை தண்டனை உண்டு.

கோரிக்கை: நாடார் குடும்பத்தினருக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் நான் விற்ற நிலம் தொடர்பான கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையை, மூன்று தலைமுறைப் பாரம்பரியத்திற்குச் சொந்தமான தாங்களே ஆவணங்களின் அடிப்படையில் தீர விசாரித்து ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

4. விவசாயிகள் சார்பான விவகாரம் & மரங்கள் வெட்டப்பட்ட சர்ச்சை


விவசாயிகள் சார்பாக: திரு. C. செல்வேந்திரன் (மண்ணாடியார் தெரு, பூம்பாறை) — கைபேசி: +91 93428 59402

(துரைசாமி மன்றாடியார் வழிவந்த சேகர் மன்றாடியாரின் மகன் திரு. செல்வேந்திரன் மற்றும் குடும்பத்தினர்)

எச்சரிக்கை: 28 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரி ஹர்ஷத் சி ஷா என்பவருக்கு பூம்பாறை கிராமம் சர்வே எண் 334/1, 334/2A மற்றும் 335/1 ஆகிய நிலங்களை நான் விற்றதும், காதர் பாட்ஷா விவசாயம் செய்து வந்த அந்நிலத்தை அவர் மறைவுக்குப் பின் நான் பாதுகாத்து வருவதும் நீங்கள் அறிந்ததே. எனது அனுமதியின்றி அங்கு நின்ற யூகலிப்டஸ் மற்றும் சவுக்கு மரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டிச் சென்றதற்கு, 'தெரியாமல் நடந்துவிட்டது, பணத்தைத் தந்துவிடுகிறேன்' என்று ஒப்புக்கொண்டபடி அந்தப் பணத்தை மேசைக்குக் கொண்டுவர வேண்டும்.

வேண்டுகோள்: சர்வே எண் 333-ல் உள்ள உங்கள் குடும்பத்தின் 10 ஏக்கர் நிலத்தையும், நான் விற்ற நிலத்தையும் இணைத்து 2010-ல் சென்னையைச் சேர்ந்த RM. ராஜேந்திரன் மற்றும் பவேஷ் (ஹர்ஷத் சி ஷாவின் அண்ணன் மகன்) ஆகியோருக்கு விற்றதில் உங்களுக்கும் அவர்களுக்குமான தொடர்பு அனைவரும் அறிந்தது. கடந்த ஜனவரி மாதம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் நான் கொடுத்த புகார் மனு (நாள்: 21/01/2026) விசாரணையின்போது, "வரவு-செலவுக் கணக்குகளை நாங்களே நேரில் பேசித் தீர்த்துக் கொள்கிறோம்" என்று எழுதிக் கொடுத்து முடித்தீர்கள். காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த வாக்குறுதியின்படி வரவு-செலவுகளை நேர் செய்து எனக்கு நியாயமாக வரவேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும்.

5. சட்டப்பூர்வ உத்தரவுகள் & நடைமுறை ஆதாரங்கள்


  1. CrPC பிரிவு 145(1) ஆணை: கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியர் (RDO) செயல்முறை ஆணை: M.C.No. 4/1999, ந.க.எண். 1789/1999/A-5, நாள்: 24.11.1999.

  2. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை: WP(MD) No. 12829/2024, நாள்: 18.06.2024.

  3. கொடைக்கானல் வட்டாட்சியர் குறிப்பாணை: ந.க.எண். 2166/2024/46/ஆ1, நாள்: 27.09.2024.

  4. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு: நாள்: 21.01.2026.

ஆவணப் பதிவாளர் & நில உரிமையாளர்:


ஹாஜி S. முகமது (வயது 75)

இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் & நில உரிமையாளர்

கைபேசி: +91 93455 62420

பூம்பாறை, கொடைக்கானல் வட்டம்.

டிஜிட்டல் ஆவணத் தொடர்:


வலைப்பூ: activismforfastjustice.blogspot.com

மின்னூல்: "திருடன் கையில் சாவி"

நாள்: 30/08/2026


Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

சட்டப் போராட்டமும் தொழில்முறை அறமும்: