அத்தியாயம் - 1: மீட்டெடுத்தல் (Recovery)

த்தியாயம் - 1: மீட்டெடுத்தல் (Recovery)

அத்தாவின் அறிவுரையும், ஒரு கரடி கதையும்

என் அத்தா எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம் இது: "பணத்திற்காகவோ, சொத்திற்காகவோ சண்டையிடாதே. உலகம் பரந்து விரிந்திருக்கிறது. மற்றவர்களுடன் போரிடும் நேரத்தை உழைப்பில் செலுத்தி, இழந்ததை விட அதிகமாகச் சம்பாதித்து வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்து. அல்லாஹ் உதவி செய்வான்."

ஆனால் என் நிலைமை இன்று அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நண்பனைப் போல இருக்கிறது. வெள்ளத்தில் ஏதோ ஒரு பொக்கிஷம் அடித்து வருகிறது என்று குதித்தவனை ஒரு கரடி பிடித்துக்கொண்டது. கரடியிடமிருந்து தப்பிக்க அவன் நினைத்தாலும், கரடி அவனை விடவில்லை. அதுபோலவே, ரியல் எஸ்டேட் தொழிலில் நான் செய்த அறியாமையாலும், சில தவறான முடிவுகளாலும் எட்டு வழக்குகள் இன்று கரடியாக என்னை இறுக்கிக் கொண்டுள்ளன.

தாங்கள் என்னைச் சேர்த்துவிட்ட கல்வி நிறுவனங்கள் "Fittest will survive" (தகுதியுள்ளவை பிழைக்கும்) என்ற டார்வின் தத்துவத்தைத்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தன. எனவே, என் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், எஞ்சிய காலத்தைச் சுயகௌரவத்துடன் கழிக்கவும் நான் இந்தச் சட்டப்போரை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அத்தா, என்னை மன்னித்துவிடுங்கள்; என் பயணம் இப்போது நீதியைத் தேடி அல்ல, தீர்வை நோக்கி!

அம்மாவின் ஆதங்கமும், என் பதிலும்

என் தாய் ஒருமுறை சொன்னார்: "அவர்களெல்லாம் காரியவாதிகளாகப் பிழைத்துக்கொண்டார்கள், நீ ஏனப்பா இப்படி ஏமாந்து நிற்கிறாய்?" என்று. அம்மா, சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரன் இறைவன் ஒருவன் இருக்கிறான். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் எதார்த்தவாதிதான் நான், ஆனால் இழந்ததை மீட்டெடுக்காமல் ஓயமாட்டேன். திருடன் விட்டுச் செல்லும் அந்த ஒரு சிறு அடையாளத்தை (ஆதாரம்) வைத்தே நான் இழந்தவற்றை மீட்டெடுப்பேன்.

மீட்டெடுக்க வேண்டிய நிலுவைகள்:

பூம்பாறைப் படலம் (Part -1 Highschool Area)

| 1 | ஆர்.எம். ராஜேந்திரன் (சென்னை) | 2010-ல் ஒப்பந்தபடி அவர் அட்வான்ஸ் பணத்தை இழந்து இருந்தாலும், மனசாட்சிப்படி அந்த பணத்திற்கு பகரமாக 11 சென்ட் வீட்டடி மனையை கொடுத்தேன். ஆனால் ₹50,000 பாக்கி வைத்துள்ளார். | இன்றைய மதிப்பிலான ₹50,000-க்கான 250 ச.அடி நிலம் அல்லது அதன் தற்போதைய சந்தை விலை +10 ஆண்டுகள் பாதுகாத்ததும், அதை தற்போது விற்று கொடுத்ததற்காக சேவை கட்டணம். |

| 2 | ஹர்ஷத் சி ஷா (வாரிசுகள்) | 30 ஆண்டுகளுக்கு முன் 8.81 ஏக்கர் விற்றதில் ₹50,000 நிலுவை. அவர் இன்று உயிரோடு இல்லை. | அந்த ₹50,000-க்கு ஈடான 18 சென்ட் நிலம் அல்லது அதன் இன்றைய மதிப்பு. |

| 3 | ஜி. பழனிச்சாமி (வாரிசுகள்) | 3.5 ஏக்கர் விற்றதில் ₹50,000 நிலுவை. சாலை வசதிக்காக என் நிலத்தைப் பயன்படுத்தியும் பணம் தரவில்லை. | அந்த நிலுவைக்கு ஈடான 22 சென்ட் நிலம் அல்லது அதன் இன்றைய மதிப்பு. |

| 4 | அமீர் அப்பாஸ் (உறவினர்) | 2017-ல் 72 சென்ட் விற்றதில் பேசிய தொகையில் ₹2.5 லட்சம் இன்று வரை தரவில்லை. | ₹2.5 லட்சம் நிலுவைத் தொகை மற்றும் அதற்கான நிலம்  |

எனது பலம்: IPC 145(1) மற்றும் உயர்நீதிமன்ற ரிட் மனு

மேற்கண்ட நபர்கள் அனைவரும் (குறிப்பாக பழனிச்சாமி மற்றும் ஜெயச்சந்திரன்) எனது அனுபவத்தில் இருக்கும் நிலத்தை ஒட்டி சாலை அமைத்துள்ளனர். ஆனால், 28 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெற்ற IPC 145(1) வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை தற்போது மதுரை உயர்நீதிமன்ற ரிட் மனு மூலம் புதுப்பித்து வைத்துள்ளேன்.

சாரம்: எனது அனுமதி இன்றி யாரும் அந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாது. இந்தச் சட்ட ரீதியான பிடியை வைத்தே, நிலுவைத் தொகையைத் தராதவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பேன்.

மீட்டெடுத்தல்  Part -2  opposite to Mahalaxmi Temple

1.   VGP கம்பெனி. எனது தாய் தந்தையர் கொடுத்த பொது அதிகார ஆவணம் காலாவதியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து முறைகேடாக விற்கப்பட்ட 6.2 ஏக்கரை மீட்டெடுக்க வேண்டும்.

 

2.   மேற்படி நிலத்தின் அருகில் 1.75 ஏக்கர் நிலத்தை போலி பட்டா உற்பத்தி செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ள, கொடைக்கானல் சோரன் சிங்கிடமிருந்து மீட்டெடுத்து எனது இறுதி இருப்பிடமான வாழ்வியல் பூங்காவை அமைக்க வேண்டும்.

2026-க்கான செயல் திட்டம் (Action Plan)

இன்று என் வங்கி கணக்கில் ₹46 மட்டுமே இருக்கலாம். ஆனால் என் மனசாட்சியே எனது நீதிபதி.

1. ஆவணங்களின் மூலம் அதிகாரப்படுத்துதல்

"Time is the essence of contract" (காலமே ஒப்பந்தத்தின் மையக்கரு). காலக்கெடு மாறியதால் பழைய ஒப்பந்த நிபந்தனைகளும் மாறியுள்ளன. இதைப் பயன்படுத்தி, புதிய சட்ட ஆவணங்களை உருவாக்கி அவர்களை வெற்றி கொள்வேன்.

2. மக்கள் மன்றம் (PAR - Participatory Action Research)

 * அறம்பாடுதல்: முகநூல், யூடியூப் வாயிலாக இந்த நான்கு நபர்களின் வாரிசுகளுக்கும், சமூகத்திற்கும் உண்மையை உரக்கச் சொல்வேன்.

 * ஆராய்ச்சி: இவர்களை நான் அணுகும்போது ஏற்படும் எதிர்வினைகளை (மனோதத்துவ ரீதியாக) ஆவணப்படுத்துவேன்.

3. இறுதி இலக்கு

இறைவன் முன்னிலையில் நான் குற்றவாளியாக நிற்க மாட்டேன். ஏனெனில் நான் கேட்பது பேராசையினால் அல்ல, எனது வாழ்வாதாரத்திற்காக. நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களுக்கு "நேரிய பாதை" எது என்பதைப் புரிய வைப்பதே இந்த மீட்டெடுத்தல் போராட்டம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்