"அறம் பாடி அழித்தல் " தீமையை.

அறம் பாடி அழித்தல்"  தீமையை.

விளக்கம்.
அறம் பாடுதல் என்பது தவறு செய்பவரை எச்சரித்தும் அவர் தவறுகளைத் திருத்திக்கொள்ளாதிருக்கும் போது பாதிக்கபட்டவர்  மனம் நொந்து போய் பாடும் சொற்கள் எதிரியை தீய்த்துவிடும் வல்லமை வாய்ந்தது .... இந்த விதி அறம் பாடுபவருக்கும் பொருந்தும். 

அறம் பாடுதல் என்றால் பாட்டுப் பாடித் தீமை அழித்தல் மட்டுமில்லை.  தீமைகளை ஏற்படுத்துவதும் உண்டு. சினிமா நடிகர் தங்கவேலு விளையாட்டிற்குக்கூட, "நீ நாசமாய்ப் போ!"  உருப்படமாட்டே!' என்ற சொற்கள் வரும் வசனங்களைப் பேசி நடிக்க மாட்டார். ஒருவரைப் பிடிக்கலைனாலும் அறம்பாடி அவர்களை அழிப்பதுண்டு. அறச் சொற்களைச் சொல்லுவதே கூடாது என்றே பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கேன்.

கலம்பகமும் அறம்பாடுதலில் ஒரு வகையே. பாட்டுடைத் தலைவன் யாரோ அவன் இறந்துவிடுவான் என்று சொல்லுவார்கள். என்றாலும் கலம்பகத்தின் பாடல் சுவைக்காகவும், அதன் மூலம் இனிய தமிழின் சுவைக்காகவும் நந்திவர்ம பல்லவன் நந்திக் கலம்பகம் பாடச் சொன்னான் (தண்டி அடிகள்???) என்றும் கலம்பகம் முழுதும் பாடி முடிக்கும்போது அவனும் உயிரிழந்தான் என்றும் படித்திருக்கிறேன். எந்த நந்திவர்மன் எனத் தெரியவில்லை.
 
ஆகவே மன்னாதி மன்னர்களும்  அறம் பாடும் புலவர்களுக்கு கட்டுப்பட்டு
நியாயமாக நடப்பர்
 
 தூய தமிழுக்கு அவ்வளவு சக்தி உண்டு
 அன்புடன்
தமிழ்த்தேனீ

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்