அறம் பாடி அழித்தல் Vs. மக்கள் மன்றம் -- 1
அறம் பாடி அழித்தல் Vs.மக்கள் மன்றம்( 1)
என்னை போன்ற ஒரு சாமானியன் ..சமூக விரோதிகளின் சதியாள் பாதிக்கப்படும்போது எப்படி தப்பி பிழைப்பது. ? வாழ்வாதாரதத்தை எப்படி காப்பாற்றுவது ? ?
மூண்று முறைகள் :
1. அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு பேச்சு வார்த்தை மூலம் சமாதானமான முறையில் பிரச்னைகளை தீர்த்துகொள்வது.
2. நீதீ மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தீர்வு கானல்.
3. இவை இரண்டிலும் முயற்சிகள் நடக்கிறது. கால அளவை குறைக்க மூண்றாம் முறையை முயன்று பார்க்க ஆசை.
4. மூண்றாம் முறை என்பது என்ன?
கடந்த காலங்களில் நடந்தேரிய நிகழ்வுகளை எழத்துரு மற்றும் வீடியோ வடிவில் வார்த்தெடுத்து மக்கள் மன்றத்தில் தீர்வுக்காக சமர்ப்பித்தல்.
5.மூண்றாம் முறையை முயன்று பார்க்க காரணம் என்ன?
இது ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிக்கும் ஒரு பொது பிரச்சனை
சமூகப் பிரச்சினை என்பது ஒரு சமூகத்தில் உள்ள பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். ஒரு சிறிய ஊழல் குழு போலியான ஆவனங்களை உற்பத்தி செய்து, சட்ட விதிகள் அனைத்தையும் புறக்கனித்து,ஏதும் அறியாத வறுமை கோட்டில் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட தனிநபர்கள் பெயரில் வங்கியிள் கடண் பெற்று அந்த முழு பணதையும் அந்த மோசடி கும்பல் தன்வசபடுத்தி ஆடம்பர வாழ்கை வாழும் காரணத்தாள் வாழ்வாதாரத்தை இழந்து நீதிதுறை வாசலை கூட மிதிக்க முடியாமள் தத்தளிப்பது ஒரு சமூக/ பொது பிரச்சனைதான்.
எனது வழக்கின் சாரம்.
காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளும் , வங்கி கொள்ளையர்களுமான Dr. விவாகர் / கற்பகம் தம்பதியர்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைகானல் தாலுகா பூம்பாரை வருவாய் கிராமம் ச.என் 330/11,330/12, /331/1 ல் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 4.35 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரிலும் , தங்கள் தொழில்துறை கூட்டாளிகள் பெயரிலும் கிரையம் பதிந்து பெற்றுகொண்டு, மேற்கன்ட சொத்தின் மதிப்பிற்கு பகரமாக தேனி, வீரபாண்டி கிராமம் ச.என் 1585/2A ல் மேற்படி விவாகர் கற்பகம் தம்பதியரால் உருவாக்கபட்ட குருகார்டன் லே அவுட்டில் C1,C2 ஆகிய இரண்டு வீட்டை பரிவர்த்தனை முறையில் பதிந்து கொடுத்தனர்.
2 ) மேற்கண்ட C1, C2, ஆகிய இரண்டு வீடுகளும் முறையே திருச்சி துப்பாக்கி தொலிற்ச்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் விமல்ஜான்,T ரமேஸ் என்ற இரண்டு நபர்கள் பெயரில் விற்பனை ஆவனத்தை தங்கள் சொந்த செலவில் உற்பத்தி செய்து அலகாபாத் வங்கியிள் ரூ.32,00,000/- (முப்பத்தி இரண்டு லட்சம்) கடன் வாங்கியிருந்ததை மறைத்து என்னை திட்டமிட்டு ஏமாற்றும் நோக்கில் என் பெயரிளும் எனது மனைவி பெயரிளும் பதிந்து கொடுத்துள்ளனர்.
3) மேலும் விமல்ஜான்,ரமேஸ் போலவே திருச்சி துப்பாக்கி தொலிற்ச்சாலையிள் வேலை செய்து கொண்டிருக்கும் 40 க்கும் மேற்பட்ட தொழிளார்களின் சம்பள பட்டியலை கமிஷன் அடிப்படையிள் பெற்று அதை இருமடங்காக திறுத்தி, இன்னும் பல பேலி ஆவனங்களை உற்பத்தி செய்து, மேற்படி தொழிளாலர் பெயரிலும், தேனி மாவட்ட சுற்றுவட்டாரத்திலுள்ள வறுமையில் இருக்கும் சில நபர்கள் பெயரிலலும்
பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளில், சில ஊழல் அதிகாரிகளின் துனையுடன் ரூபாய் இருபது கோடி க்கும் மேல் கொள்ளை அடித்து தலைமறைவு வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர்.
எமது பனிவான வேண்டுகோள்;
என்னை போன்ற மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2007 பிரிவு 21 ன்கீழ் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சொத்துக்களை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்றும் ஒரு குறைதீர் மனு அரசு அலுவளகங்களில் பெறபட்டதிலிருந்து 30 தினங்களுக்குள் குறை தீர்க்க படவேண்டும் என்பதாக அரசு( நிலை) ஆனை என் 73 .தேதி. 11/06/2018 . குறிப்பிட்டுள்ளது
எனது குறைதீர் மனு 30/08/2019 ம் தேதி, மான்புமிகு தமிழக முதல்வர் சிறப்பு குறைதீர் முகாமில் ஏற்று கொள்ளபட்டு தேனிமாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் சுற்றி சுற்றி வந்து முறையான விசாரனை இல்லை என்பதாலும் பாதிப்பு அடைந்த 100 க்கும் மேற்பட்ட நபர்களில் நானும் ஒருவன் என்பதாலும் இந்த வழக்கை மக்கள் மன்றத்தில் வைக்கபடுகிறது.
எனது பிரச்சனை ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வுகள். ஆதார ஆவனங்களும் சாட்சிகளும் 'உள்ளங்கை நெல்லிக்கனி' போல் தெளிவாக உள்ளது.
மக்கள் மன்றம் தீர்த்து வைக்குமா?
நாட்டின் நலன் கருதி, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இ.த.ச.பிரிவு.52 மற்றும் 78 ன் படியும் இதை பிரசுரமாக வெளியிடவும், ஊடகங்கள், மற்றும் இனையதளத்திலும் வெளியிடலாம் என்பதை அரசியள் சாசனத்தின் படி தெரிவித்துகொள்ளபடுகிறது.
இப்படிக்கு. Haji.S.Mohamed. 9345562420.
Comments
Post a Comment